பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 நெய் உண்ணுேம், பால் உண்ணுேம்'

பெங்களுரில் என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிருர், ஏ. எஸ். ஆர். சாரி என்று பெயர். 91 வயசு கிரம்பியவர்: உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர். இன்னும் திடமாக நடமாடுகிருர். சென்னைக்கு வருகிருர். வேறு இடங்களுக்கும் பிரயாணம் செய்கிருர். ஆஜாது பாகுவான வடிவம்.” -

அவருக்குப் பெளத்த சமயநூல்களில் விருப்பம் அதிகம். சென்னே வானெலியில் முன்பு காலேயில் அருள் வாக்கு என்ற நிகழ்ச்சியை ஒலிபரப்பினர்கள். அந்த நிகழ்ச்சியில் நானும் சில நாள் பேசியிருக்கிறேன். வானெலி யில் நான் பேசும் பேச்சுக்களைக் கேட்டு எனக்கு நண்பர் ஆனவர்கள் பலர். அவர்களில் ஒருவர் அன்பர் திரு ஏ. எஸ். ஆர். சாரி, 'அருள் வாக்கு'க் கேட்டு அதைப் பாராட்டி எழுதினர். சென்னைக்கு வந்தபோது பார்த்தார். நானும் பெங்களுரில் லால் பாக்'குக்கு அருகில் உள்ள அவர் மாளிகைக்குச் சென்று பார்த்திருக்கிறேன். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்காமல் போகமாட்டார்.

அவர் முதல் முறையாக எங்கள் வீட்டுக்கு வந்தபோது காபி கொடுத்தேன். "வேண்டாம்' என்ருர், 'பால் கொடுக்கட்டுமா?’ என்றேன்: "அதுவும் வேண்டாம்'

  • சென்ற ஆண்டு இவர் காலமாகி விட்டார்.