பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய் உண்ணுேம். பால் உண்ணுேம் 97

என்ருர், மோர்கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார் பிறகுதர்ன் அவருடைய விரதம் இன்னதென்று அறிந்தேன். சைவ உணவு என்று மரக்கறி உணவை இந்தப் பக்கத்தில் சொல்கிருர்கள். அவரோ கடுஞ் சைவ உணவுக்காரர். பால் முதலியவையும் பசுவினிடமிருந்து வருவன ஆதலின் உண்ண மாட்டாராம். " இவ்வளவு கடுமையாக விரதம் இருக் கிறீர்களே! உங்கள் உடம்புக்கு வலிமை வேண்டாமா?” என்று கேட்டேன்.

" நான் நன்ருகத்தானே இருக்கிறேன் : இந்த வயசில் நன்ருக நடமாடுகிறேன். என் வேலைகளே நான் கவனித்துக் கொள்கிறேன். நன்ருகத் தூங்குகிறேன் ' என்ருர்.

அப்போது எனக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை யில் உள்ள ஒரு பாட்டின் பகுதி கினேவுக்கு வந்தது. பாவை கோன்பு நோற்கும் வகையைச் சொல்லும்போது, 'நெய் யுண்ணுேம் பாலுண்ணுேம்' என்று வருகிறது. அவர்கள் நோன்பு இருக்கும் சமயத்தில்தான் நெய் உண்ணுமலும் பால் உண்ணுமலும் இருக்கிருர்கள். நோன்பு முடிந்தவுடன், 'பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார' உண் ஆணுவார்கள். அன்பர் திரு சாரியோ எப்போதுமே நெய் உண்ணுர்: பாலும் உண்ணுர்! அவர் வந்தால் எதாவது பழம் மட்டும் கொடுப்பேன். அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தேன்.

இதைவிடப் பெரிய வியப்பு ஒன்று பாரிஸ் மாநகரில் காத்திருந்தது. அங்கேயும் இப்படி ஓர் அதிசய மனிதரைப் பார்த்தேன். மேல் காட்டுக்குச் சென்று வந்தவர்களுக்கு ஒரு செய்தி தெரியும். மேல் நாட்டிலும் புலால் உண்ணுத விரதத்தை மேற்கொண்டவர்கள் இருக்கிருர்கள். மரக்கறி உணவுச் சங்கங்கள் அங்கங்கே இருக்கின்றன. காந்தியடி கள் லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்தபோது அப்படி ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அகில உலக மரக்கறி உணவுச் சங்கம் என்றே ஒன்று இருக்கிறது.

கண்டறி-7