பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கண்டறியாதன கண்டேன்

ஆல்ை மேல்காட்டுச் சைவ உணவு உண்பவர்களுக்கு முட்டை விலக்கு அல்ல. முட்டையை அவர்கள் புலாலாக மதிப்பதில்லை. "குஞ்சு பொரிக்காத முட்டைகளும் உண்டு. ஆகையால் அவற்றை உண்பதில் தவறு இல்லை' என்று சமாதானம் சொல்லுவார்கள். அத்தகைய முட்டையைக் கூமுட்டை என்று இங்கே சொல்வார்கள். மேல்நாட்டில், " நான் புலால் உணவை உண்ணுவதில்லை' என்று சொன்னல் மரக்கறி உணவுகளைத் தருவார்கள். அவற்ருேடு முட்டையையும் தருவார்கள். 'புலால் வேண்டாம்; முட்டையும் கூடாது' என்று சொன்னல்தான் தனியே மரக்கறி உணவுகளே வழங்குவார்கள்.

முட்டையையும் சைவ உணவாகப் பாவிக்கும் மேல் காட்டில் - பாரிஸில் - பாலைக்கூட அசைவ உணவாக எண்ணுபவர் இருக்கிருர் என்ருல் ஆச்சரியம் அடையாமல் என்ன செய்வது?

அன்று தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கின் மூன்ருவது காள். தமிழ்நாட்டிலிருந்து சென்று பாரிஸிலுள்ள பல்கலக் கழகக் கல்லூரிகளில் படித்துவரும் பல மாளுக்கர்களுடைய பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அவர்களில் மிகவும் முக்கிய மானவர் திரு எஸ். இராமசாமி என்பவர். அவர் இாாம நாதபுரக்காரர். கணிதத்துறையில் பயிற்சி பெறுகிறவர். இப்போது பம்பாயில் இருக்கிருர். அவர் பல வகையில் எனக்கும் என் அன்பர்களுக்கும் உதவி செய்தார். நான் கண்டு வியப்படைவதற்குரிய நல்லவர்களைக் காட்டினர்.

அன்று ஜூலை மாதம் 17ஆம் தேதி (1970). காலையில் கருத்தரங்கில் ஆராய்ச்சியுரைகள் நிகழ்ந்தன. அவற்றைப் பற்றிப் பின்பு சொல்கிறேன். காலே நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அன்பர் இராமசாமி, 'இன்று உங்களை ஒர் உணவுச் சாலக்கு அழைத்துச் செல்லப்போகிறேன். அங்கே வந்து பார்த்தால் நீங்கள் பிரமித்துப் போவீர்கள் !" என்று பிடிகை போட்டார். -