பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கண்டறியாதன கண்டேன்

அந்த இந்திரபோக நகரத்தில் சைவ உணவுக்கென்று: தனியே ஒருவர் உணவுச்சாலை நடத்துகிருர் என்ருல் அது வியக்கத்தக்க செய்திதானே ?

அங்கே எங்களே அழைத்துச் சென்ருர், இராமசாமி. சிறிய உணவு விடுதிதான். படாடோபமே இல்லை. அதன் பெயர் எல் இன்கா (L INCA). மரக்கறி உணவுச்சாலை என்று விளம்பரப் பலகை தொங்கியது. அதில் இருந்தவை. யெல்லாம் பிரெஞ்சு மொழியில். அதன் விலாசத்தை எப்படித் தமிழில் எழுதுவதென்றே தெரியவில்லை. அங்கே கிடைத்த கார்டில் அதைப்பற்றிப் பின்வரும் விவரம் இருந்தது: L’ INCA, Restaurant Vegetarian. Diete t 1 que Cerealien. (இதற்கு என்ன பொருள் என்று கேட் காதீர்கள்!) அது இருக்கும் இடம் 4, ரூ லாசெபெ. (4, Rue Lacepede, Paris 5.) - -

அந்த உணவுச்சாலையை நடத்துபவரின் பெயர் பாரிஸ். (Paris). அவர் இத்தாலியர். அவருக்கு 65 வயசு இருக்கும். வாட்டசாட்டமாக இருக்கிருர். உத்தியோகம் பார்த்து ஒய்வு பெற்றவர். நல்ல பணக்காரர். சும்மா இருக்கக் கூடாதென்று தம் கொள்கையை மற்றவர்களும் கடைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடையை, £51–த் துகிருர் - -

அங்கே பால் கிடைக்காது, வெண்ணெய் கிடைக்காது. - நெய் உண்ணுேம்; பால் உண்ணுேம்' என்னும் கூட். டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அங்கே சுவையான பல உணவுப் பண்டங்கள் கிடைக்கும். அந்தக் கடை முதலாளி யோடு பேசினேம். ஊனேத் தொட்ட கத்தியைக் கூட அவர் விசி எறிந்துவிடுவாராம். ' உயிர்களிடத்தில் அன்பு வேனும். அதை வாழ்க்கையில் காட்டவேணும். அதற். காகவே இதை கடத்துகிறேன்” என்ருர்.

நாங்கள் தக்காளிப் பழமும் அரிசிச் சாதமும் கலந்த உணவை உண்டோம். அதற்கு டாகு டாகு (takou-takou) என்று பெயர். ஃபாலடேல் (falate) என்ற ஒருவகை அடை