பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கண்டறியாதன கண்டேன்

ஒற்றுமை வேற்றுமைகளைத் திரு தெ. பொ. மீ. எடுத்துக் காட்டினர்.

திருநீலகண்ட நாயனரைப் பற்றி அவர் கூறிய செய்தி கவனிப்பதற்குரியது. பெரியபுராணத்தில் அவர் 'இன்பத் துறையினில் எளியரானர்' என்று சேக்கிழார் பாடுகிருர். கன்னடத்தில் உள்ள வரலாறு அவரைக் குற்றமற்றவராகக் காட்டுகிறது. திருநீலகண்டநாயனர் வீதிவழியே போகும் போது ஒரு தாசி, வீதியில் அழுக்குத் தண்ணிரை வீசிக் கொட்டினள். அது அவர்மேல் விழுந்தது. அதைக் கண்டு வருந்திய அந்தப் பெண்மணி அவரைத் தம் வீட் டுக்குப் பணிவுடன் அழைத்து வந்து நீராடச் செய்து ஆடையணி புனேந்து விருந்து அருத்தினள். இந்த அலங் காரங்களைக் கண்டே நாயனருடைய மனைவியார் அவரிடம் ஊடல் கொண்டார். சிதம்பரநாத புராணம் என்ற தமிழ் நூலில் இந்த வரலாற்றை எடுத்து ஆண்டிருக்கிருர் அதன் ஆசிரியர்.

தெலுங்கில் ஆழ்வார்கள் வரலாறுகளைப் புலவர்கள் பாடியிருக்கிருர்கள். தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் பற்றிக் கிட்டத்தட்டப் பதினெட்டு நாடகங்கள் தெலுங்கில் உள்ளன. குலசேகரப் பெருமாள் வரலாறும் தனியே தெலுங்கில் உண்டு. அறுபத்துமூவரைப் பற்றிய வர லாறுகளே மல்லிகார்ஜுன பண்டிதர் இயற்றிய சிவதத் வஸாரமு என்ற நூலில் காணலாம். சிறுத்தொண்டருடைய வரலாற்றைப் பலர் பாடியிருக்கிருர்கள்.பெரியபுராணத்தில் சிறுத்தொண்டருடைய புதல்வன் பெயர் சீராளன் என்று வருகிறது. தெலுங்கில் சிறுத்தொண்டரையே சிரியாளன் என்று கூறுகின்றனர். சுந்தரர், திருலேகண்டர், கண் ணப்பர், சம்பந்தர், திருநாளைப்போவார் ஆகியோர்களைப் பற்றிய தெலுங்கு நூல்களும் உள்ளன. பஸவ புராணம் சம்பந்தரைப் பிள்ளே நாயனர் என்று குறிப்பதோடு அவர் முருகனுடைய அவதாரமென்றும் சொல்கிறது. ...