பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி விநோதங்கள் 109.

அந்த ஆராய்ச்சிக்காரர் சொன்னர். திருமுருகாற்றுப் படையில் சிவபெருமானப் பற்றிய செய்தி வருகிறது. முருகன் 'மலேமகள் மகன்' என்றும், "ஆல்கெழு கடவுட் புதல்வன்' என்றும் வருகிறது. திருமுருகாற்றுப்படை தோன்றிய காலத்திலும் அதற்கு முன்பும் தோன்றிய சங்க நூல்களில் சிவபெருமானைப் பற்றிய செய்திகள் பல வருகின்றன. அவற்றை அவர் கவனிக்கவில்லை போலும்!

தொல்காப்பியத்தைப் பழங்காலத்து உரை நடை நூல் என்று அவர் சொன்னதைக் கேட்டு எனக்குத் தூக்கிவாரிப் GLTL’t g. (In the earliest Tamil Prose work. Tolkappiyam.)

தொல்காப்பியத்திலுள்ள திணைப் பாகுபாடுகளையும். அவற்றிற்குரிய தெய்வங்களேயும் பற்றி அவர் சொன்னர் . முல்லைக்கத் திருமாலும், குறிஞ்சிக்கு முருகனும், மருதத் துக்கு இந்திரனும், நெய்தலுக்கு வருணனும் என்று இருப்பதைக் கூறினர். இந்தக் தெய்வங்களின் தலைமை பிற்காலத்தில் மாறி விட்டதாம்! இந்திரனுக்கும் வருண னுக்கும் பதிலாகச் சிவனும் இராமனும் வந்துவிட்டார். garrih. (In all these lists Vishnu or Mayon and Ceyon or Murukan are mentioned. The two other Gods of the list of Tolkappiyam viz. Ventan and Varunan are replaced in. later works by Siva and Rama.)

இவற்றைக் கேட்கும்போது வேடிக்கையாக இல்லையா?

ஆலுைம் அவருடைய உரையில், தெரிந்து கொள்ள வேண்டிய பல கருத்துக்களேயும் சொன்னர். அதற்காக அவருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

சமனெளி பாதம் என்ற மலை ஒன்று இலங்கையில் இருக்கிறது. அதன்மேல் இரண்டு திருவடி கிலேகள் இருக்கின்றன. சமன் என்பது யமனைக் குறிப்பது என்று பேரறிஞர் பரணவிதான் எழுதியிருக்கிருராம்.