பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கண்டறியாதன கண்டேன்

புகுந்ததையும் எடுத்துரைத்தார். விஜயநகர அரசினர் காலத்தில் வியாபாரத்திலும் அரசியல் துறையிலும் ஈடுபட்ட தெலுங்கர்கள் தமிழ் நாட்டில் குடியேறியதையும் அவர்கள் வியாபாரத் துறையில் சிறந்து கின்றதையும் விரித்துரைத்தார். டச்சுக்காரர்களும் பிறரும் தமிழ். நாட்டிலிருந்து ஏராளமாக உடை வகைகளே ஏற்றுமதி செய்தார்கள் என்றும், நெசவுத் தொழிலாளர்களிடமிருந்து சரக்குகளை வாங்கி அவர்களுக்கு வழங்கும் வேலையை இடைகின்ற தரகர்கள் மேற்கொண்டிருந்தார்கள் என்றும், அவர்கள் மிகுதியான ஊதியத்தைப் பெற்ருர்கள் என்றும் சொன்னர். தஞ்சைப் பகுதியிலிருந்து அரிசி மிகுதியாக ஏற்றுமதியாயிற்று. இவ்வாறு வணிகத்துறையில் தமிழ் நாடு எவ்வாறு சில காலம் சிறந்தோங்கியது என்பதை அவர் பேச்சுத் தெளிவாக்கியது. -

இலங்கைத் தமிழராகிய திரு எச். டபிள்யூ. தம்பையா, ஆரியர்களின் சட்டங்கள் வளர்ந்த வரலாற்றைப் பற்றிப் பேசினர். இலங்கையில் உள்ள தேசவளமை என்ற மரபைப்பற்றி இடையிலே குறிப்பிட்டார்.

அமெரிக்கராகிய பிலிப் என். ஜென்னர் என்பவர் க்மெர் (Khmer) என்னும் மொழியில் தமிழ்ச் சொற்கள் விரவியிருப்பதைப் பற்றிப் பேசினர். சமயத் துறையில் இந்தோனேசியப் பகுதிகளில் வடமொழியின் ஆதிக்கமே. மிகுதியாக இருக்கிறதென்றும், பொது மக்கள் வாழ்விலும் கலத்துறையிலும் தமிழ்ச் சொற்களும் பழக்கங்களும் விரவியுள்ளன என்றும் அவர் கூறினர். கப்பல் வியாபாரம் சம்பந்தமாகவும், கப்பலின் உறுப்புகளின் பெயர்களைக் குறிப்பிடும்போதும் வரும் சொற்களும் தொடர்களும் தமிழி ைேடு தொடர்புடையனவாக இருக்கக்கூடும் என்பதை அவர் குறிப்பிட்டார். மூன்ரும் நாள் காலக் கருத்தரங்கில் ஐந்து பேரறிஞர்கள் ஆராய்ச்சியுரை வழங்கினர்கள். அவ்வளவையும் சிக்கித்துச் சீரணித்து மேலே ஆராய்ச்சி செய்ய அந்தக் குறுகிய நேரத்தில் வாய்ப்பு ஏது? அது