பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 11 தமிழ் ஓசை

    • , * o %3 2-லகத் தமிழ் விழாவின் மூன்ரும் நாள் பிற்பகல் நிகழ்ச்சிக்குச் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு கெ. து. சுந்தரவடிவேலு தலைமை தாங்கினர். பாரதி யார் கல்வியைப் பற்றிக் கூறும் கருத்துக்களே எடுத்துரைத் தார். அமெரிக்காவில் விஸ்கான்ஸின் பல்கலைக் கழகம், மாடிஸன் என்ற இடத்தில் இருக்கிறது. அங்கே தென் னிந்திய வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சி நடைபெறுகிறது. அந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவராகத் திரு பேராசிரியர் ஆர். இ. ஃப்ரைக்கன்பர்க் (R. E. Frykenberg) என்பவர் இருக்கிருர். அவர் தமிழாராய்ச்சிக் கருத்தரங்கில் இக் காலத் தென்னிந்தியச் சரித்திரத்தைப் பற்றி ஒர் ஆராய்ச்சி யுரை வழங்கினர். м

அப்பால் திரு தனிநாயக அடிகள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் சமுதாய வாழ்க்கையைப் பற்றிய உரையை ஆற்றினர். அந்த அந்த நாடுகளில் எத்தனை தமிழர்கள் வாழ்கிருர்கள் என்ற புள்ளி விவரத்தை அவர் சொன்னர். இந்தியாவில் மூன்று கோடிக்கு மேல் தமிழ் பேசும் மக்கள் இருக்கிருர்கள். அடுத்தபடி இலங்கையில் 23 லட்சத்துக்கு மேல் உள்ளனர். மலேயாவிலும் சிங்கப் பூரிலும் ஆறரை லட்சம் பேருக்கு மேல் வாழ்கிருர்கள். பர்மாவில் இரண்டு லட்சம் (1966 ஜனக் கணக்குப்படி). பிஜித் தீவில் சற்றேறத் தாழ 25,000 பேர் இருக்கிருர்கள். மோரிஸ் தீவில் 45,000 பேர். மார்ட்டினிக் என்ற இடத்தில் 14,000 பேர். இந்தோனிஷியா, வியட்நாம், தென்