பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் ஓசை 115.

ஆப்பிரிக்கா, கயான, சூரிநாம், திரிகிடாட் முதலிய இடங் களிலும் தமிழர்கள் வாழ்கிரு.ர்கள்.

அவர்கள் குடியேறின முறைகளையும் அங்கங்கே வாழும் வகைகளையும் தனிநாயகம் எடுத்துரைத்தார். தமிழ் மக்கள் குறைவாக வாழும் இடங்களில் அவர்கள் தங்கள் காகரிகத் தையும் மொழியையும் வரவர மறந்து வருகிருர்களாம்.

ழான் சாயா என்பவர் கயானவிலுள்ள தமிழரைப் பற்றிப் பேசினர். சிங்கப்பூர் வானெலி கிலேயத்தில் உள்ள திரு ரமணி, சிங்கப்பூரில் உள்ள தமிழர் சமுதாயத்தைப் பற்றி விரிவான முறையில் ஆராய்ச்சி செய்து ஒர் உரையை வழங்கினர்.

மூன்றுவது நாளாகிய இன்று மாலை 6 மணிக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த அரங்கி ல் தமிழோசை கணிரென்று கேட்டது. தமிழகத்திலிருந்து சென்ற சில அறிஞர்கள் இனிய தமிழில் பேசினர்கள். அயல் காட்டு அறிஞர்கள் மழலைத் தமிழில் பேசினர்கள்.

தமிழ்ச் சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டும் என்ற பேரார்வத்தினல் பாரிஸில் உள்ள மாணவர்கள் மாணவர் தமிழ் மன்றம் என்ற ஒரு மன்றத்தை அமைத்து அதற்கு அன்று திறப்பு விழா நிகழ்த்தினர்கள். வந்திருந்த அறிஞர் களிற் பலரைத் தமிழில் பேசும்படி கேட்டுக்கொண்டனர். இந்த மன்றத்தை அமைப்பதில் பேரூக்கம் கொண்டு செயலாற்றியவர் திரு ஜமாலுதீன் என்ற மாணவர்.

இந்தத் தொடக்க விழாவுக்குப் புதுச்சேரி முதல்வர் தலைமை தாங்கினர். இதன் அமைப்பாளராகிய திரு ஜமாலுதீன் முதலில் வரவேற்புரை பகர்ந்தார். இது தமிழ் மாணவர் மன்றம் அன்று மாணவர் தமிழ் மன்றம்’ என்று எடுத்தவுடன் ஒரு விளக்கத்தைக் கூறினர். தமிழ் நாட்டு. மாணவர்கள் சேர்ந்து நடத்தும் மன்றம் அன்று இது. பாரிஸில் பல காட்டிலிருந்தும் வந்துள்ள மாணவர்கள்