பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் ஓசை 117

பயில்கிருர்கள். அவர்களில் தமிழ் பயிலவும் தமிழறிவை வளர்த்துக் கொள்ளவும் விருப்பம் உள்ள மாணவர்கள் ஒருங்குசேர்ந்து இந்த மன்றத்தை நிறுவினர்கள். திரு ஜமாலுதீன் இரண்டு விண்ணப்பங்கள் செய்து கொண்டார். "பல நாட்டு மாணவர்கள் இங்கே வந்து பல துறையில் பயிற்சி பெறுகிருர்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் பலர் உதவிப் பணம் பெற்றுப் பயிற்சி பெறுகிருர்கள். அவ்வாறே இந்த காட்டிலுள்ள மாணவர்களேத் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் கற்கும்படி செய்ய வேண்டும். பலருக்கு அந்த விருப்பம் இருக்கிறது. அவர்கள் விஷயத்தில் அங்கிய காணயச் செலாவணிச் சங்கடம் வராமல் செய்ய ஒரு வழி உண்டு. அவர்கள் இங்கிருந்து வரும் செலவைத் தாங்களே மேற்கொண்டு பயணச் சிட்டு முதலியவை வாங்கி விடுவார் கள். அங்கே தங்கும் காலத்தில் அவர்களுக்கு ஆகும் செலவை மட்டும் தமிழ்நாட்டு அரசோ மத்திய அரசோ கொடுத்தால் போதும். இப்படிச் செய்தால் தமிழின் அருமை பெருமைகளே இந்த காட்டிலுள்ளார் அறிவதற்கு நல்ல வாய்ப்பு உண்டாகும் என்பது அவர் செய்த முதல் விண்ணப்பம். மற்ருெரு விண்ணப்பம் அவர் தம் அநுபவத்தால் அறிந்து சொன்னது. "நான் தி.மு. க.வில் சேர்ந்திருந்தேன். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டக் தில் கலந்து கொண்டேன். இங்கே வந்த பிறகு எனக்கு ஓர் உண்மை புலயிைற்று. தமிழ் மாணக்கர்கள் ஆங்கிலக் தைப்போல அயல்மொழி ஒன்றையாவது அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் ஒன்று மட்டும் தெரிந்தால் போதும் என்று இருக்கக்கூடாது. அயல்மொழி தெரிந்தால் தான் பிற நாடுகளில் வந்து பயிற்சி பெறவும் உத்தியோகம் பெறவும் முடியும்' என்று வற்புறுத்திக் கூறினர்.

தலைமை தாங்கிய புதுவை முதலமைச்சர், 'இதுவரை யில் காம் தமிழைப் பாதுகாக்க வேண்டியதாக இருந்தது. அந்தக் கடமையை ஒரளவு செய்துவிட்டோம். இனிமேல்