பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் ஓசை 119

பேன். இருபது வருஷம் முன் அங்கே இருந்தேன். இப்போது மலையாளம் மறந்து போயிற்று. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது எல்லாருக்கும் பொதுவான மகா வாக்கியம் அன்ருே:'-அன்ருே என்பதை ஒரு விதமாக உச்சரித்து அவர் பேசியபோது மறுபடியும் சபையில் ஆரவாரம் எழுந்தது. அதற்கு ம்ேல் அவர் ஆங்கிலத்தில் பேசலானர். 'இந்த மன்றம் வெற்றியுடன் நடைபோட வேண்டும். தமிழ்ப் பண்பாடு, சமய மரபு ஆகியவற்றை யும் மாளுக்கர்கள் பரப்ப வேண்டும். சைவ வைணவ இலக் கியங்களைப் படிக்க வேண்டும். ஐரோப்பாவில் உள்ள விஞ்ஞானிகளைச் சந்திக்க வேண்டும். இந்தத் தமிழ் மன்றம் ஐரோப்பியரும் தமிழரும் சந்திக்கும் இடமாக விளங்க வேண்டும்; விஞ்ஞானமும் கலையும் சந்திக்கும் இடமாக இருக்க வேண்டும் என்ருர்.

கெட்டையான வடிவமுள்ள டாக்டர் கெல்லர் திருமுரு காற்றுப்படையை ஆராய்ந்து ஒர் ஆராய்ச்சியை எழுதி யிருக்கிருர். அதைப் பற்றிக் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் தமிழ் விழாவில் பேசினர். ஒளியும் நிழலும் மாறி மாறி வருவதுபோல அந்த நூலில் முரண்பாட்டு நயம் இருப்பதை எடுத்துக் காட்டினர். - - டாக்டர் கெல்லருக்குப் பின் இலங்கைத் தமிழராகிய டாக்டர் சிவஞானசுந்தரம் பேசினர். அவர் மருத்துவ டாக்டர். கந்தி என்னும் பெயரில் பல கட்டுரைகளே எழுதி யிருக்கிருர். லண்டனில் ஒரு தமிழ்ச் சங்கம் இருப்பதை அவர் குறிப்பிட்டு, 'இந்த மன்றத்தினர் வியாபாரக் கருத் துக்களையும் விஞ்ஞானக் கருத்துக்களையும் தமிழில் ஆக்க வேண்டும். லண்டனில் லண் டன் முரசு என்ற பத்திரிகையை கடத்துகிருர்கள். அதுபோல இந்த மன்ற மும் ஒரு பத்திரிகையை கடத்த வேண்டும். நவீனக் கருத் துக்களைத் தமிழில் எடுத்துரைக்க வகை செய்ய வேண்டும்' என்ருர்: X

பிறகு திரு தெ. பொ. மீட்ைசிசுந்தரனர் பேசினர். 'தமிழ் மாணவர் அனைவரும் தமிழின் தூதுவராக விளங்க