பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் ஓசை 121

இருந்திராது. புரட்சிக் கவி பாரதியாரைப் போல நாடக ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் இறுதிக்காலத்தில் அங்கே சென்ருர், அந்த மண்ணில் மறைந்தார்.

இத்தகைய பேரறிஞர்களுக்குப் புகலிடம் அளித்த பிரெஞ்சு அரசுக்கு நன்றி செலுத்த நாம் பாரிஸ் நகருக்கு வர வேண்டும், அதற்காக வந்திருக்கிருேம்.

இங்கே ஜோன் ஆப் ஆர்க்கின் சிலையைப் பார்த்தபோது எனக்கு ஜான்ஸி ராணியின் கினேவு வந்தது. நெப்போலி யனைப் பற்றிக் கேட்கும்போது இராசேந்திரன் நினைவு வந்தது. அவர்களுடைய எண்ணங்களிலும் போக்கிலும் வேறுபாடு இருக்கலாம். எண்ணங்களே மறந்து எழுச்சியை மறவாமல் இருக்கலாம். -

இந்த மூன்று நாட்களாக நடைபெறும் விழாவில் அறிஞர்கள் ஆராய்ச்சியுரை வழங்கினர்கள். நேற்றைத் தமிழின் வளத்தைத் தெரிந்துகொண்டேன்; இன்றைத் தமிழின் ஏற்றத்தையும் தெரிந்துகொண்டேன். நாளைத் தமிழ் எப்படி இருக்க வேண்டுமென்று எண்ணிப் பார்க் கிறேன். பிரெஞ்சு மொழி, ரஷ்ய மொழி, ஜெர்மன் மொழி என்பவை எப்படி உயர்ந்திருக்கின்றன என்று பார்க்கிறேன். ஆராய்ச்சியாளர்களே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழி எப்படி இருக்கத் தவறிவிட்டது என்று சொல்லுங்கள். 'உயர் ஆரியத்தக்கு நிகராக வாழ்ந்தேன்' என்று தமிழ்த்தாய் கூறுவதாகப் பாரதியார் பாடினர். காம் இப்போது, உயர் ஆங்கிலத்துக்கு நிகராக வாழ்வேன்' என்று சொல் லும்படி செய்ய வேண்டும். நாம் இப்படி யெல்லாம் செய்தோமானல் நம்முடைய சாதனைகளே நம்முடைய பேரப்பிள்ளைகள் பாராட்டுவார்கள். -

பழங்காலத்தில் அறம் பொருள் இன்பம் என்ற மூன்றைப்பற்றியும் நூல் இயற்றினர்கள். அவை மூன்றும் நிரம்பினுல் வீடு வரும் என்ருர்கள். நம்பியும் கங்கையும் ஒருவரை ஒருவர் காதலித்து வாழ்ந்ததாகச் சங்க தரலத்தில் - பாடினர்கள். பிறகு அந்தக் காதலே ஆன்மிக வாழ்க்கையில்