பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பட முடியுமா? 7

இறைவனைத் தொடலாம். ஆகவே 9-ஆம் தேதி அங்கே சென்றபோது சிவாசலபதியின் திருவடியைக் கைகளால் தொட்டு வணங்கி, வெளிநாட்டுப் பயணம் இனிது நடக்கத் திருவருள் பாலிக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டேன். வேல்வகுப்பில் வரும், 'தனித்துவழி நடக்குமென திடத்தும்ஒரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகல் துணைய தாகும்' என்ற பகுதியை அடிக்கடி சொல்லிக் கொண்டேன். சொற்பொழிவை ஆற்றிவிட்டு, 10-ஆம் தேதி காலையில் சென்னே வந்து சேர்ந்தேன். அன்று மாலை விமானத்தில் பம்பாய்க்குப் புறப்பட வேண்டும். -

என் மனைவி ஆவலுடன் ஜிப்பாவில் ஒரு டஜன், வேட்டியில் இருபது என்று சலவை செய்து அடுக்கி வைத்திருந்தாள். அதிகமாக மூட்டையைச் சேர்த்துக் கொண்டால், போகிற இடத்தில் சங்கடமாக இருக்கும் என்பதைப் பலரும் வற்புறுத்தினர்கள். ஆகவே, சுருக்கமாக ஆடைகளையும், சில புத்தகங்களையும் மாத்திரம் வைத்துக் கொண்டேன். அவல், சத்துமா ஆகிய உணவுப் பொருள்களையும் என் நண்பர் மணியன் உபதேசித்தபடி எடுத்துக்கொண்டேன்.

என்னுடைய நண்பர்களே, அவர்களுடைய உறவினர் களோ நண்பர்களோ யாரேனும் பாரிஸில் இருக்கிருர்களா, லண்டனில் இருக்கிருர்களா, ஜெர்மனியில் இருக்கிருர்களா என்று விசாரித்து விசாரித்து அவர்களுடைய விலாசங்களைக் கேட்டு எழுதி வைத்துக்கொண்டேன். சிலருக்குக் கடிதங்கள் எழுதி வாங்கிக்கொண்டேன். சிலருக்கு முன் கூட்டியே என் வருகையைத் தெரிவித்து அன்பர்களைக் கடிதம் எழுதச் சொன்னேன். சில நண்பர்கள் வலிய வந்து இங்கே இங்கே இன்னர் இன்னர் இருக்கிருர்கள் என்று கூறி விவரம் தெரிவித்தார்கள். எல்லாச் செய்திகளேயும் தொகுத்து வைத்துக்கொண்டேன்.