பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் ஓசை 125:

படிக்கிருர்கள். ஆங்கிலத்தைத் தனியாக்ச் சொல்லித் தருகிருர்கள். - -

"நான் ஒரு கடைக்குப் போனேன். அங்கே நான் அறிந்த மாணவர் ஒருவரைக் கண்டேன். ஆங்கிலத்தில் மூன்று முறை தவறியவர் அவர். அங்கே அவர் ஆங்கிலத்தில் கன்ருகப் பேசினர். எனக்கு வியப்பாக இருந்தது. "எப்படி அப்பா, இப்படி உனக்கு ஆங்கிலத்தில் கன்ருகப் பேச வந்தது?" என்று கேட்டேன். அவர் ஆங்கிலேயரிடம் வேலை செய்தார். 'இவர்களோடு பழகிப் பேசத் தெரிந்து கொண்டேன்' என்ருர் அவர். அவசியம் நேர்ந்தால் எதையும் கற்றுக் கொள்ளலாம்.

'பள்ளிக்கூடத்தில் படித்த மானக்கர்கள் ஆங்கிலத்தில் பேசுவது, ஹோம் ஸயன்ஸ் கற்ற பெண்கள் செய்யும் சமையலப் போல இருக்கிறது. அந்தப் பெண்கள் திருமணம் ஆகிக் கணவன்பால் அன்பு வந்தால் நன்ருகச் சமைக்கக் கற்றுக்கொள்வார்கள். என் மனைவி செல்லப் பெண். அடுப்படியே தெரியாது. இப்போது நன்ருகச் சமைக்கிருள். தேவை வந்தால் எதையும் கற்றுக் கொள்ளலாம். ராஜாஜி அவர்கள் பி. ஏ. படித்தபோது, தமிழில் தோல்வி அடைந்தார். இப்போது கன்ருக எழுதுகிருர், தெளிவாக எழுதுகிருர், உழைப்புக் திறமையும் அறிவுக் கூர்மையும் இருந்தால் எதையும். எளிதில் கற்றுக் கொள்ளலாம். -

"மகள் பிறந்த வீட்டை விட்டுப் புக்ககத்துக்குச் சென்று வாழும்போது பிறந்தகத்து விஷயங்களைப் பேசமாட்டாள். நல்ல மருமகளாக, புக்ககத்தார் போற்றும் வகையில், அவள் வாழ வேண்டுமென்றே தாய் தந்தையர் விரும்புவார்கள். அதே நிலையில் மாணவர்கள் இருக்கிருர்கள். வெளிநாட்டி வந்து கல்வி பயிலுகிறவர்கள் நம் காட்டுப் பிரச்னைகக் பற்றி இங்கே சொல்லக் கூடாது. இங்கே கற்க வற்றை கன்ருகக் கற்க வேண்டும்.'