பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கண்டறியாதன கண்டேன்

எனக்குப் பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்துத் துணைவேந்தர் திரு சுந்தரவடிவேலு பேசினர். 'தமிழ் நாட்டில் தமிழ்த்தாய் சிங்காதனத்தில் வீற்றிருந்தாள். இப்போது உலக அரங்குக்கு வந்து விட்டாள். இதல்ை நாம் பெருமைப்படலாம். ஆனல் இப்போதுதான் ஆபத்து வரும். நாம் காவல் புரிய வேண்டும். மன்னர் நகரில் உலாப் புறப்பட்டால் காவலர்கள் காப்பது வழக்கம். அதுபோல் காமும் காவல் புரிய வேண்டும். இந்த மாகாட்டில் அறிஞர்கள் பல பல ஆராய்ச்சியுரைகள் வழங்கினர்கள். என்ன என்னவோ கழைக்கூத்துக் காட்டினர்கள். நாம் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. வியப்புத் தரும்படி அவர்கள் ஆடின. கூத்தை நாம் சும்மா பார்த்துக்கொண்டு கின்றுவிடக் கூடாது. மாணவர்கள் தமிழை நன்ருகப் படிக்க வேண்டும். தாமே ஆராய வேண்டும். எது உண்மை என்று கண்டறிய வேண்டும். தமிழை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். தமிழ்த் தாயைப் பாதுகாக்க வேண்டும். பட்டம் பெற்ற பிறகு தமிழை மறந்து போனவர்கள் பலர். அதல்ைதான் தமிழ் ஆராய்ச்சி கட்டுக் காவல் இல்லாமல் எங்கெங்கோ போய்விடுகிறது. மாணவர்கள் காலமெல்லாம் படித்து முன்னேற வேண்டும்' என்பது அவர் பேச்சின் சாரம்.

தமிழ் காட்டிலிருந்து இந்தத் தமிழ்க் கருத்தரங்குக்குச் சென்ற குழுவின் தலைவராக இருந்தவர் திரு மதியழகன். அவருக்கு உதவியாளராக வந்தவர் திரு வேங்கட சுப்பிரமணியன் அவர்கள். அவரும் மாணவர் தமிழ் மன்றத் தொடக்க விழாவில் பேசினர். தக் "கிரேக்கச் சரித்திரத்தில் ஒரு செய்தி வருகிறது. யஐலெக்ஸாண்டர் பிறந்தவுடன் அவர் தகப்பனராகிய ஒப்லிப்ஸ் அரிஸ்டாட்டலுக்கு ஒரு கடிதம் எழுதினர். "எனக்கு மகன் பிறந்தானென்று நான் மகிழவில்லை. தாங்கள் வாழும் காலத்தில் அவன் பிறந்தான் என்று மகிழ்கிறேன்' என்று எழுதினர். இந்த மாணவர் மன்றம் உலகத் தமிழ் விழா நடைபெற்றபோது தோன்றியது