பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தமிழ் மாணவர் 13:

சிறப்பு. இது பிறந்தவுடனே ஒரு குறையை கிரப்பியது. இங்கே தமிழோசையுடன் இது பிறந்தது. இங்கே கடை பெற்ற கருத்தரங்கில் நல்ல முறையில் அறிஞர்கள் ஆராய்ச்சியுரைகளை வழங்கினர்கள். சில சமயங்களில் போலியான ஆராய்ச்சிகள் தோன்றுவதுண்டு.

இவ்வாறு சொல்லிவிட்டு உதாரணமாக ஒரு கதையை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவிலிருந்து ஒரு மன்னர் இங்கிலாந்து சென்ருர். ஜார்ஜ- மன்னர் அவரை வர வேற்று விருந்தளித்தார். இந்தியாவிலிருந்து வந்தவ ராதலின் அவருக்கு விருப்பமான உணவு வகைகள் வழங்க வேண்டுமென்பது இங்கிலாந்து மன்னரின் விருப்பம். இந்தியாவிலிருந்து அப்பளம் வருவித்திருந்தார்கள். அவற்றைப் பொரித்துப் பரிமாற ஏற்பாடாகியிருந்தது.

இந்தியாவிலிருந்து அப்பளத்தை அனுப்பியவர்கள் ஒன்ருேடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இடையிடையே எண்ணெய்க் காகிதத்தை வைத்து அனுப்பியிருந்தார்கள், இங்கிலாந்து அரண்மனைச்சமையற் காரர்கள் விஷயம் தெரியாமல் அப்பளத்தையெல்லாம் எடுத்து எறிந்து விட்டு எண்ணெய்க் காகிதத்தைப் பொரித்துப் பரிமாறினர்களாம்!

இந்தக் கதையைச் சொல்லிய திரு வேங்கட அப்பிரமணியன், 'பல கருத்தரங்குகளில், ஆராய வேண்டிய விஷயத்தையே விட்டுவிட்டு எதை எதையோ பேசுவார்கள். ஆனல் இங்கே நல்ல முறையில் கருத்தாழத்துடன் ஆராய்ச்சி நடைபெற்றது' என்ருர்.

ஆராய்ச்சிக் கருத்தரங்கைப் பற்றிய கருத்து வேறு பாடுடையவர்கள் அவருடைய கூற்றை ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனல் அவர் சொன்ன கதை நன்முக இருந்தது. அமரர் டி. கே. சி. அவர்கள் இந்தக் கதையை அடிக்கடி கூறி, இக்காலத்து ஆராய்ச்சிக்காரர்களைப் பரிகாசம் பண்ணுவார்.