பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கண்டறியாதன கண்டேன்

இறுதியாகச் சென்னையிலிருந்து வந்திருந்த மாணவர் தலைவர் திரு சனர்த்தனம் பேசினர். 'பாரிஸ், மாணவர்கள் எழுச்சியைக் கண்ட நகரம். மாணவர்கள் கிளர்ந்தெழுந்து, எங்களைத் தேர்விலே தள்ளாதீர்கள் என்று சொன்னர்கள். பல நாடுகளில் மொழிப் பிரச்னை வந்தபோது மாணவர்கள் தம் தாய் மொழியைப் பாதுகாக்க முன்வந்து போராடி ஞர்கள். இந்தியா பின்தங்கியது என்று இங்கிலாந்துக் காரர்கள் பிரசாரம் செய்தார்கள். டார்ஜீலிங்க் நகரைக் காட்டிப் பாதையில் யானே படுத்திருப்பதைப் படம் போட்டுக் காட்டிப் பரிகசித்தார்கள். அத்தகைய உணர்ச்சி மாற மாணவர் தொண்டு புரிய வேண்டும். இந்த மன்றம் உலக ஒற்றுமைக்குக் கருவியாக இருக்க வேண்டும்.' -

இவ்வாறு பல அறிஞர்களின் தமிழ்க் குரல் முழங்க, மாணவர் தமிழ் மன்றம் பாரிஸில் தோன்றியது.

திரு சனர்த்தனம் பிரெஞ்சு மாணவர் புரட்சியைப் பற்றிச் சொன்னபோது எனக்கு ஒரு செய்தி கினேவுக்கு வந்தது. பாரிஸ் மாநகரில் சாலைகளில் அழகிய மரங்களே வைத்து வளர்க்கிருர்கள். அங்கங்கே சிறிய சிறிய பூங்காக்களும் மரம் அடர்ந்த பொழில்களும் இருக்கின்றன. சில இடங்களில் மரங்கள் ஒரே சீராக இல்லாமல் குட்டையும் கெட்டையுமாக இருந்தன. அந்தக் காட்சியைப் பார்த்து ஒரு நண்பரிடம், "அழகாக மரங்களைச் சாலை யோரத்தில் வைத்திருக்கிருர்கள். ஆனால் இப்படி இடை யிடையே குட்டையான மரங்களே வைத்திருக்கிருர்களே, ஏன்?' என்று கேட்டேன்.

'அவை புதியனவாக வைத்தன” என்ருர் கண்பர்.

"மற்ற மரங்களே கட்டபோது அந்த இடங்களில் கடவில்லையோ?" என்றேன். - -