பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 கண்டறியாதன கண்டேன்

ளுடைய வருகையை இராமசாமி அவர்களுக்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும். எங்களைக் கண்டவுடன் அவர்கள் அன்புடன் வரவேற்ருர்கள். அவர்கள் பிரெஞ்சு மொழியில் பேசினர்கள். அன்பர் இராமசாமி எங்களுக்கு அவர்கள் பேச்சை மொழிபெயர்த்துச் சொன்னர்; அப்படியே எங்கள் பேச்சையும் அவர்களுக்குப் பிரெஞ்சில் எடுத்து விளக்கினர்.

அந்தத் தம்பதிகள் மிகவும் சாந்தமான தோற்றத்தை உடையவர்கள். நாகரிக உச்சியில் கும்மாளமிடுகின்ற பாரிஸ் மாநகரில் அவர்கள் அமைதியாகத் தம் வாழ்க்கையை கடத்தி வருகிருர்கள். அவர்கள் பிறப்பால் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள். ஆனல் அதுஷ்டானத்தாலும் கம்பிக்கை யிலுைம் இந்துக்கள்! இந்த வியப்பான உண்மையைத்தான் அங்கே காங்கள் அறிந்து கொண்டோம்.

பாரிஸில் அநேகமாக ஒவ்வொரு கட்டடத்திலும் தரைக்குக் கீழே கில அறைகள் இருக்கும். அங்கே சாமான் களைப் போட்டு வைத்திருப்பார்கள். மார்செல் பேனர்ட் எங்களைத் தம் கடைக்குள் அழைத்துச் சென்று படிகளில் இறங்கிக் கீழே உள்ள நிலவறைக்கு வரச் சொன்னர். காங்கள் போைேம். அங்கே ஒரு சிறு கூடம்; அதை அடுத்து ஒரு சிறிய அறை. அப்படிச் சொல்வதைவிட அர்த்த மண்டபமும் கர்ப்பக் கிருகமும் உள்ள ஒரு சிறிய கோயில் என்றே அதைச் சொல்லிவிடலாம். கூடத்தின் சுவர்களில் இராமர், கிருஷ்ணர், அம்பிகை, சிவபெருமான் படங்களே மாட்டியிருந்தார். காந்தியடிகளும் அந்தத் தெய்வங்களோடு ஒருவராகக் காட்சி அளித்தார். 'என்ன இது கிறிஸ்துவர் கடையில் நம் காட்டுப் படங்களா! நம் ஊரில் இப்படிப் படங்களே மாட்டிவைக்கும் பழக்கம் மாறிச் சினிமா நட்சத் திரங்களே மாட்டும் பழக்கமல்லவா வந்துகொண்டிருக்கிறது? உண்மையிலே இது மிகவும் வியப்பை ஊட்டும் காட்சிதான்" என்று என் மனத்தில் எண்ணினேன். கூடத்தோடு ஒட்டிய அந்தச் சிறிய அறையைப் பார்த்தேன். மார்செல் பேஞர்ட்