பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கண்டறியாதன் கண்டேன்

நாங்கள் யாவரும் ஆச்சரியத்தில் மூழ்கினுேம் "நீங்கள் இவற்றுக்குப் பூசை செய்கிறீர்களா?' என்று கேட்டோம். "ஆம், பூசை செய்வது மட்டும் அல்ல; சமயம் கிடைக்கும் போதெல்லாம் இங்கே வந்து தியானம் செய்கிறேன். என் மனைவியும் தியானம் செய்வாள். எங்கள் வீட்டிலும் விக்கிர கங்களும் படங்களும் இருக்கின்றன" என்ருர் மார்செல் பேர்ைட். அங்கும் தியான அறை உண்டாம்.

"என்ன தியானம் செய்கிறீர்கள்?" "நான் ஒம் என்று பிரணவ மந்திரத்தைச் சொல்லிச் சிவபெருமானத் தியானிக்கிறேன். என் மனைவி விஷ்ணுவைத் தியானிக்கிருள். மூன்று மூர்த்திகளும் மூன்று மகாசக்திகளின் வடிவம் என்று கான் கருதுகிறேன்.'

'இந்த வழிபாட்டை எப்படித் தெரிந்து கொண் டீர்கள்?"

"இந்து சமய சம்பந்தமான புத்தகங்களைப் படித்திருக் கிறேன். தியானத்தினல் மன அமைதி பெறலாம் என்பதை கான் அறிந்தேன்; இப்போது அநுபவத்தில் அதை உணர் கிறேன். இந்தியாவிலிருந்து எனக்கு ஏற்ற குருநாதர் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண் டிருக்கிறேன்.'

அவருடைய கண்களில் அப்போது ஒரு புதிய ஒளி வீசியது.

"தியானம் செய்வதனால் என்ன பயனே அடைக் தீர்கள்?' என்று கேட்டேன்.

"மனம் அமைதியாக இருக்கிறது. கோபதாபம் இல்லை. கடவுளுடைய அருளின் மகிமையை உணர்கிறேன். எனக்குக் கவலையோ துன்பமோ இல்லை. எப்போதும் இன்ப மாகவே இருக்கிறேன்."

'ஏப்போதும் இன்பமாகவே இருக்கிறேன்: இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன பயன் வேண்டும்: 'இன்பமே எங்காளும் துன்பம் இல்லை' என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு