பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படமும் விக்கிரகங்களும் 139*

முன்னர் அப்பர் சுவாமிகள் கூறினர், அப்படிக் கூறிய பெரியவர் திருவவதாரம் செய்த பூமியில், இன்று. எத்தனை பேர் துணிவாக அப்படிச் சொல்லக்கூடியவர்கள்?. இதோ பிரஞ்சு காட்டின் தலைநகரில், உலக இன்பங்களின் உச்சியை எட்டிப் பிடிக்கும் நாகரிகம் கோலோச்சும் இடத், தில், தியானத்தில் ஊறி கின்று, இறைவன் அருள் ஒன்றே. இன்பம் தருவது என்பதை அநுபவத்தால் உணர்ந்து, இன்பமே எங்காளும் துன்பம் இல்லை என்று பெருமிதத். தோடு சொல்லும் ஒரு தியானசிலரை, பக்தரை, அருளா ளரை நான் பார்க்கிறேன். பெரிய புராணத்தில் வரும். தொகையடியார்களுள் அப்பாலும் அடிசார்ந்தார்’ என்று ஒரு வகையினர் வ ரு கி ரு ர் க ள். அந்தக் காலத்துக்கு. அப்பாலும், தமிழ்நாட்டுக்கு அப்பாலும் இறைவனிடம் பக்தி பூண்டு வாழும் பக்தர்கள் எல்லாரையுமே அப்பாலும், அடிசார்ந்தார் என்று சொல்கிருர் சேக்கிழார். 'அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் பாடி, யிருக்கிருர். பரமசிவனைத் தியானம் செய்து மன அமைதி: யுடன் வாழும் இந்த மார்செல் பேர்ைடையும் அப்பாலும் அடிசார்ந்தார் குழுவில் சேர்ப்பதுதானே கியாயம்? என் உள்ளம் அப்படித்தான் அவரை எண்ணியது. எத்தனை பக்தி எத்தனை உறுதி! என்ன அமைதி!

"நீங்கள் இந்தியாவுக்குப் போக விரும்பவில்லையா' 'எனக்கு அங்கே போக வேண்டுமென்ற எண்ணம் இல்லை. கடவுள் எனக்கு வேண்டியதை இங்கேயே தரு. வார்; தந்துகொண்டிருக்கிரு.ர்.'

‘'வேண்டத் தக்க தறிவோய் வேண்ட முழுதும் தருவோய்'ே என்ற மணிவாசகர் குரலும், 'வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்' என்ற திருநாவுக்கரசர் குரலும் அவருடைய பேச்சின் பின்னலே கின்று எதிரொலி எழுப்புகின்றனவோ! எந்தக் காலத்தில் எந்த இடத்தில் எந்தத் தொழிலில் எப்படி இருந்தால் என்ன? ஆண்டவன்