பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படமும் விக்கிரகங்களும் 14密

கொள்வார்கள், துன்பம் நீங்கிய பிறகு அந்தக் கோயி' லுக்கு வந்து வழிபடுவார்கள். கம் காட்டில் பழனியாண்ட வ&னயும் வேங்கடாசலபதியையும் வேண்டிக்கொள் வதில்லையா? அது மாதிரிதான் இதுவும். மனித மனத்தின் ஆசைகளும் நம்பிக்கைகளும் ஆறுதல் பெறும் வழிகளும் வெளியில் வெவ்வேறு வடிவத்தில் தோற்றம் அளித்தாலும், அடிப்படையில் எல்லாவற்றிற்கும் ஊடே ஒரு பொதுவான உணர்வோட்டம் இருக்கத்தான் இருக்கிறது.

மார்செல் பேர்ைடும் அவருடைய மனைவியும் மாண்ட் செயிண்ட் மைகேலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை போய் வருகிருர்கள். அவர் மருந்தியலறிவுப் பரீட்சை (Pharmaceutical)யில் தேர்ந்தவர். அவர் மனைவியும் அந்தப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர். படிப்பை முடித்துவிட்டு அவர் பாரிளில் மருந்துக்கடை வைத்துத் தொழில் நடத் தலாம் என்று எண்ணினர்; இந்த மருந்துக் கடையை விலைக்கு வாங்கினர். இதன் பெயர் என்ன தெரியுமோ ? Qgu?sort μ(35á, urrunoff! (Pharmacie Saint Michael). அவர் வைத்தது அன்று முன்பே இருந்த பெயர் அது. மைகேவின் அருளே இப்படிப் பெயருள்ள ஒரு கடையைத் தமக்குக் கிடைக்கச் செய்தது என்று அவர் மகிழ்வதில் வியப்பு ஏதும் இல்லையே?

அது மட்டுமா? அந்தக் கடை இருக்கும் தெருவின் பெயரே ஸெயிண்ட் மைகேல் வீதி திருவருள் எப்படி யெல்லாம் பொருத்தங்களைக் கொண்டுவந்து விடுகிறது, பார்த்தீர்களா ?

ஸெயிண்ட் மைகேல் என்பவரின் திருவுருவத்தில் கையில் ஈட்டி இருக்கும். காலடியில் ஒரு கொடிய விலங்கு கிடக்கும். அதை அந்த ஈட்டியால் குத்தி அழிக்கும். கோலத்தில் மைகேல் கிற்பார். இந்துமத நூல்களைப் படித்த மார்செல் பேனர்டு இந்த வடிவத்தின் தத்துவம் இன்னதென்று தம் போக்கின்படி ஒரு கருத்தைச் சொல். கிறார். அந்த விலங்கு அதர்மத்தைச் சுட்டுகிறது. ஸெயிண்ட்.