பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படமும் விக்கிரகங்களும் 145

பிரணவ மந்திரமாகிய ஒம் என்பதன் மகிமையை எடுத் துரைத்தாள்.

மார்செல்பேனர்டின் விழிகள் திறந்தன. ஓம் என்ற மகாமந்திரத்தைப் பற்றிக்கொண்டார். தியானம் செய்யத் தலைப்பட்டார். அப்போதுதான் அவருக்கு விக்கிரகத்தின் சிறப்புப் புலயிைற்று. மனமென்னும் குரங்கை வசப் படுத்தத் தியானம் எவ்வளவு முக்கியம் என்பதையும், தியானம் செய்வதற்கு உருவ வழிபாடு எவ்வளவு இன்றி யமையாதது என்பதையும்அவர்அநுபவத்தில் உணரலானர். தியானத்திலே ஈடுபட ஈடுபட அவருக்கு அமைதி பிறந்தது; மனம் இலேசாகிவிட்டது. வாழ்வே இனித்தது. சிக்கல் என்பதே அவர்முன் கிற்கவில்லை.'கடவுள் அருளால் நான் சுகமாக இருக்கிறேன்!" என்று அவர் சொல்லும் போது அவர் முக ஒளியில் அவருடைய கண்ணின் பிரகாசத்தில், அவருடைய இதயத்தின் கிறைவு, சாந்தியின் பிரதிபலிப்புத் தெரிகிறது.

இப்போது அவருக்குத் தீ மிதித்தல் முதலியவற்றில் வியப்பு ஒழிந்துவிட்டது, "சினம்இறக்கக் கற்ருலும் சித்தியெல்லாம் பெற்ருலும், மனம்இறக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே' என்று தாயுமானவர் கேட்பது அவருக்குப் புரிகிறது, அவர் அகவுலகத்தில் வாழ்கிரு.ர். அவருடைய வாழ்க்கைத் துனேவியாரும் தம்முடைய தியான மூர்த்தியாக மகாவிஷ்ணுவை வைத்து வழிபடு கிருர், தியானம் செய்கிருர்,

மார்செல் பேனர்டு தியானத்தில் ருசி கண்டவர்; தம்மை இழந்த கிலேயில் இருக்கும் இன்பத்தைப்பெற்றவர். அவர் மருந்துக்கடையின் நிலஅறை ஒரு திருக்கோயி லாக, யோகபீடமாக, தியானமண்டபமாக, உலகப் பூசல் களுக்கும் அறிவுப் புயலுக்கும் நாகரிகப் பிரளயத்துக்கும் அகப்படாத அமைதிச் சூழலாக விளங்குகிறது. அதையும் அவரையும் அவர் மனேவியையும் பார்க்கும் பேறு கிடைத் ததே என்று இன்றும் கினைந்து மகிழ்ச்சி அடைகிறேன்,

கண்டறி-10 -