பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவில் தமிழ் நூல்கள் 147

என்பதை விவரமாக எடுத்துரைத்தார். ஓரளவு உழைப்பின் பயனக இருந்தது அவருடைய ஆராய்ச்சி.

அவருக்குப்பின் ஆஸ்திரியாவிலிருந்து வந்திருந்த திரு ஹான்ஸ் ஸ்டிராஸர் (Hans Strasser) என்னும் அறிஞர் பிராஹி மொழியில் தோன்றியுள்ள புதிய இலக்கிய முயற்சி களைப் பற்றிப் பேசினர். திராவிட இன மொழிகளின் சார்புடையது பிராஹி மொழி என்று மொழிநூல் வல்லுநர் சொல்வார்கள்.

காலே அரங்கு முடிந்ததும் ஒரு பெரிய கடைக்குப் போய்ச் சுற்றிப் பார்த்தோம். அங்கே இல்லாத பண்டம் ஒன்றும் இல்லை. தெருவில் இரு மருங்கும் உள்ள கட்டடங் களில் அந்தக் கடை இருக்கிறது. தெருவுக்கு மேல் ஒரு கட்டடத்திலிருந்து மற்ருெரு கட்டடத்துக்குப் போகப் பாலம் அமைத்திருக்கிருர்கள். எங்கே பார்த்தாலும் ஏறவும் இறங்கவும் எஸ்கலேட்டர்கள். ஒரு பக்கம் உணவு வகைகள்: ஒரு பக்கம் உடை வகைகள்: ஒரு மாடியில் பாத்திர வகைகள் மற்ருெரு மாடியில் அணிகலன்கள். எதைப் பார்ப்பது? எதை விடுவது? கால் கடுக்கக்கடுக்கப் பார்த் தோம். ஜனங்களின் கூட்டம் ஜேஜே என்று தெரிந்தது.

பிற்பகல் 2-30 மணிக்குத் தமிழ் மாநாடு. அதுதான் இறுதிக் கூட்டம். ஆராய்ச்சி யுரைகளே யாரும் படிக்க வில்லை. சம்பிரதாயப்படி நன்றியுரைகள் பரிமாறப்பட்டன. இறந்துபோன அறிஞர்களின் பிரிவு குறித்து இரங்கல் இர்மானம் கிறைவேறியது. திரு தனிநாயக அடிகள் இந்த மாநாடு கடத்துவதற்குத் தாமும் பிறரும் செய்த முயற்சி களைப் பற்றிச் சொன்னர். இதற்கு உதவியவர்களுக் கெல்லாம் நன்றி கூறினர். 1973ஆம் ஆண்டுத் தொடக்கத் தில் இலங்கையில் கான்காவது தமிழ் ஆராய்ச்சிக் கருத் தரங்கு நடைபெறும் என்று சொன்னர். அவருக்குப் பின், மாநாட்டுக்கு வந்திருந்த சிலர் தம்முடைய நன்றியறிவைத் தெரிவித்துப் பேசினர். .