பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கண்டறியாதன் கண்டேன்

இதைச் சொல்கிருர்கள். வேறு பல கலைப் பண்டங்களும் இங்கே உள்ளன. -

தமிழ் மாநாட்டுக்கு வந்தவர்கள் பார்ப்பதற்காக எற்பாடு செய்திருந்த காட்சிப் பொருள்களை ஒரு பெரிய அறையில் வைத்திருந்தார்கள். நான் எட்டுச் சுவடிகள் சிலவற்றைப் பார்த்தேன். உத்தரகாண்ட வசனம், தொன் அால் விளக்கம் என்ற ஏடுகளைப் பார்த்தேன். இந்த நூல் கிலையத்தில் தமிழ்ப் புத்தகங்கள், எட்டுச் சுவடிகள் யாவும் சேர்ந்து 578 இருக்கின்றனவாம். இது ஒரு பெரிதல்ல. ஆனல் மிகப் பழங்காலத்தில் அச்சிட்ட சில நூல்கள் இங்கே இருந்தன. அவைகளே கவனிப்பதற்குரியன. .

பைபிளில் ஒரு பாகம் 1727ஆம் ஆண்டில் அச்சிட்டது. கட்டை அச்சில் அச்சானது அது. "வேத பொஷ்தகத்தின் மூணும் வகுப்பு' என்று அதன் பெயரை முகப்புப் பக்கம் காட்டுகிறது. லத்தின் மொழியில் தமிழ்ப் புத்தகங்களின் பட்டியல் ஒன்று 1727ஆம் ஆண்டில் வெளியானதை அங்கே பார்த்தேன். 290 புத்தகங்களுக்கு மேல் அதில் விவரம் இருந்தது. மரியதாஸ் பிள்ளை என்பவர் பல தமிழ் நூல் களேப் பிரெஞ்சு மொழியில் பெயர் த் தி ரு க் கி ரு ர். அவர் படத்தையும் வரலாற்றையும் ஒரு புத்தகத்தில் கண்டேன். அவர் மொழிபெயர்த்த பாகவதம் 1788இல் அச்சிட்டதை அங்கே வைத்திருந்தார்கள். 1716ஆம் ஆண்டு அச்சிட்ட புத்தகம் லத்தீனில் உள்ள தமிழ் g)swj&cxrih (Grammatica Damulica), £L£}-av $$6ìr அகராதி (1845) ஒன்றும் கண்டேன். .

18ஆவது நூற்ருண்டில் சென்னையில் கல்விச் சங்கம் என்ற ஒன்று இருந்தது. அதில் பல நூல்கள் வெளியாயின. அக்காலத்தில் இருக் த புலவர்களாகிய மழவை மகாலிங்கையர், சிவக்கொழுந்து தேசிகர், திருச்சிற்றம்பல தேசிகர் முதலியோர் அந்தச் சங்கத்தில் இருந்து பல தமிழ் நூல்களை வெளியிட்டனர். பல நூல்களை எழுதி அச்சிட்டனர். -