பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிளில் தமிழ் நூல்கள் 153

சிலையின் கீழே வைத்திருக்கிருர்களாம். இலக்கியப் படைப் பாளியின் வடிவத்தின்கீழ் அவருடைய எழுத்துக்கு மூல மாகிய உணர்ச்சியலைகளைத் தாங்கிய இதயமே பீடமாக இருக்கிறது, இலக்கியப் பேரறிஞரிடம் எத்தனை பக்தியோடு அதை இங்கே வைத்திருக்கிருர்கள் !

அவருடைய நூல்களில் அவருடைய இதயத்தில் எழுந்த கருத்தலைகளையும் கற்பனை அலைகளேயும் காண்கிருேம், அவற்றைக் கொண்டிருந்த இதயம் ஒரு பெருங்கடல், வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் படைப்பிலே அது பெரியது, அந்த இதய அலைகள் அவர் நூல்களில் இருக் கின்றன். அவர் இதயமோ அடங்கி ஒடுங்கி அவருடைய உருவச் சிலைக்குக் கீழே இருக்கிறது. அவர் சிலேயை வணங்கும்போது அவர் இதயத்தையும் கூடவே வணங்கு கிருேம், -

கலேகளையும் இலக்கியத்தையும் பாராட்டத் தெரிங் தவர்கள், அவற்றைப் படைத்தவர்களே கினைத்து கன்றி யுணர்வுடையவர்களாக இருக்கத் தெரிந்தவர்கள் பிரெஞ்சு மக்கள் என்பதை நாளுக்கு நாள் உணரும்படி பாரிஸ் மாநகரில் கண்ட அரும் பொருள்களும் காட்சிச்சாலைகளும் பிறவும் செய்தன.