பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கண்டறியாதன கண்டேன்

காலேயில் புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். விமான கிலையத்தைச் சேர்ந்த ஒருவர், “பாஸ்போர்ட் எங்கே?' என்று கேட்டார். என் கையில் உள்ளதைக் கொடுத்தேன். அப்போது, 'ஹெல்த் சர்ட்டிபிகேட் எங்கே?' என்று கேட்டார். அதைக் கேட்டவுடன் எனக்குத் திடுக்கிட்டது. என் முட்டாள். தனம் எனக்குப் புலப்பட்டது. பத்து காளேக்கு முன்பே சென்னைக் கார்ப்பொரேஷனுக்குப் போய்க் காலரா, அம்மை ஊசிகளைக் குத்திக்கொண்டு வாங்கின உடல்நலச் சான்றிதழை என் மேசையில் ஒரிடத்தில் வைத்திருந்தேன். வருகிறவர்களுடனும் போகிறவர்களுடனும் பேசிக் கொண்டே இருந்தபடியால் இன்ன இன்ன சாமான்களே எடுத்து வைக்க வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லி யிருந்தேன். அந்தக் கலவரத்தில் அந்தச் சான்றிதழை எடுத்து வைத்துக்கொள்ள மறந்துவிட்டேன். பிறரும் கினைவுபடுத்தவில்லை. பாஸ்போர்ட்டும் விஸ்ாவும் டிக்கட்டும் பயணத்துக்கு எவ்வளவு இன்றியமையாதனவோ அவ்வளவு இன்றியமையாதது அந்தச் சான்றிதழ். அது இல்லாவிட்டால் வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய முடியாது. பல முறை வெளிநாடுகளுக்குச் சென்ற எனக்கு இது கன்ருகத் தெரியும். ஆல்ை இப்போது நான் ஏமாந்து போய்விட்டேன்.

காலை எட்டு மணிக்குள் எப்படி அதை வருவிப்பது? காளேக்கு கம்மால் புறப்பட முடியுமா? இந்தச் சிக்கலில் என்னுடைய மனம் தவித்தது. அங்கிருந்த அத்தனை பேரும் என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோலத் தோன்றியது. ‘என்ன முட்டாள்தனம் செய்துவிட்டோம்!' என்று, பிறருக்கு முன்னல் என் முகவாட்டத்தைக் காண்பிப்பதற்கு காணி, ஏதோ பைத்தியக்காரச் சிரிப்புச் சிரித்துக்கொண் டிருந்தேன். 'ஹெல்த்சர்ட்டிபிகேட் ஹெல்த் சர்ட்டிபிகேட்! என்று என்னுடைய உள்ளம் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. . . .