பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாக்தி பக்தர்கள் 155

ஒரு காட்டோடு மற்ருெரு காடு போட்டி போட்டுக்கொண்டு படைக்கலன்களைச் சேமித்து வருகிறது. வல்லரசுகள் என்ற: பெயருக்குப் பொருள் வலிமையோ,பண்பாட்டு வலிமையோ, மக்கட்கூட்ட வலிமையோ காரணமாக இருப்பதில்லை. படைக்கலன்களே எந்த நாடு அதிகமாகச் சேமித்து வைத்துக்கொண்டு எந்தச் சமயத்திலும் யாரையும் வெருட்டும் அசுரபலத்தைக் கொண்டிருக்கிறதோ அதையே வல்லரசு என்று சொல்லும்படி ஆகிவிட்டது. இரும்பு. பிடித்தவன் கை சும்மா இராது என்பது பழமொழி. இப்போது இரும்பெல்லாம் ஆயுதங்களாக மாறிவிட்டது. ஆகவே படைப்பலமுடைய நாடுகள் சும்மா இருப்பதில்லை. சண்டை மூட்டிக்கொண்டும் சண்டைக்குக் காரணமான செயல்களேச் செய்து கொண்டும் சண்டைக்கு உதவி புரிந்து: கொண்டும் வருகின்றன. அமைதி என்பது எங்கோ ஒடி. ஒளிந்துகொண்டிருக்கிறது. இந்த கிலேயில் நவநாகரிக நாடாகிய பிரான்சில், அஹிம்சைக் கொள்கையையும் சர்வோதயக் கொள்கையையும் தங்கள் வாழ்க்கை நெறி' யாகக் கொண்ட சங்கம் ஒன்று இருக்கிறதென்பது வியப் பாக இல்லையா ? -

கொம்யூனெதே த லார்ஷ் என்பதற்கு ஒடச் சங்கம் அல்லது ஓடக் குழு என்று பொருள் கொள்ளலாம். வாழ்வில் வரவரக் குழப்பங்களும் சிக்கல்களும் மிகுதியாகி. அகில கடலில் தத்தளிக்கும் துரும்புபோல மக்கள் தவிப்ப தற்கு மாற்ருக, இந்தக் குழப்பக் கடலேத் தாண்டிக் கறை யேற விடும் ஒடத்தைப்போல இருப்பது இந்தச் சங்கம் என்று தோன்றுகிறது. தொழில்மயமாக மாறுவதையே தன் குறிக்கோளாகக் கொண்ட இன்றைய சமுதாயத்தில், வாழ்விலும் பொருளாதார நிலையிலும் பல பல சிக்கல்கள். மனிதனே இயந்திரமாக மாறிவிடுகிருன். இதய உணர்ச் சிக்கு இடமின்றி எல்லாரும் மிக்க வேகமாக எதையோ நோக்கி ஓடுகிருர்கள். அமைதியைத் தேடிக்கொண்டா? இல்லை இல்லை; இன்னும் அதிகச் சிக்கலும் அதிகமான குழப்பமும் உள்ள கிலேயைத் தேடிக்கொண்டு ஓடுகிருர்கள்.