பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கண்டறியாதன கண்டேன்

வேகம் அதிகமாகிறது; செலவும் அதிகமாகிறது. வெறியும் அதிகமாகிறது. இந்த வாழ்க்கையின் பயங்கரமான வேகம் எங்கே போய் முடியப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆல்ை ஒன்று தெரிகிறது. நேற்றைவிட இன்று அதிக வேகமாகப் போகிறது. உலகம்: நேற்றைவிட அதிகக் குழப்பமும் சிக்கலும் உண்டாகின்றன. 'வேகங் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க' என்று மாணிக்கவாசகர் சொல்கிருர். அவர் எந்த வேகத்தைக் குறிக்கிருரோ தெரியாது. இன்று உலகம் போகும் வேகத்தைக் கெடுத்து

ஆள யார் வருவார்கள் ? .

இந்த ஒடச் சங்கம் ஒரளவில் இந்த வேகத்தில் சிக்காமல் விவேகத்தோடு வாழ முயல்கிற தொண்டர்களைக் கொண்ட சிறிய கூட்டம். பிரான்சில் நகருக்கு வெளியே உள்ள ஊர் களில் இந்தச் சங்கத் தொண்டர்கள் இருக்கிரு.ர்கள்.

போரே கூடாது, படைகளைக் குவிக்கக் கூடாது என்பது இவர்களின் கொள்கை. பிரான்சு நாட்டில் உடல் வலிமை யுள்ள ஒவ்வோர் ஆண்மகனும் குறிப்பிட்ட பிராய அளவில் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதைச் சட்டப்படி கட்டாயமாக்கி யிருக்கிருர்கள். ஒராண்டு இந்தப் பயிற்சி பெறவேண்டும். படைக்கலன்களே ஆளும் முறைகளைக் கற்றுத் தருவார்கள். வருங்காலப் போர்களில் இப்படிப் பயிற்சி பெற்றவர்கள் படையின் பலத்தைப் பெருக்கப் பயன்படுவார்கள் என்ற எண்ணத்தினுல் இந்தக் கட்டாய இராணுவப் பயிற்சியைப் பிரெஞ்சு அரசு வற்புறுத்துகிறது, இந்தப் பயிற்சிக்கு உட்பட விரும்பாதவர்கள் இரண் டாண்டுகள் சமூகத் தொண்டு செய்யவேண்டும். அவர் களைப் பிரெஞ்சுக் காலனிகளுக்கு அனுப்பி, அங்கே தொண்டு செய்ய ஏற்பாடு செய்வார்கள். 聳 滋滑說 இரண்டாண்டு என்றும், பயிற்சி இடம் ச்ொந்த நாட்டுக்குப் புறம்பாக இருக்க வேண்டும் என்றும் உள்ள சிபந்தனை, இந்த முறையை ஏற்று நடத்துவது சிரமமாக இருக்க வேண்டும் என்பதை எண்ணியே அமைத்தது போலும்!