பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்தி பக்தர்கள். - 157°

இந்த இரண்டு வகையிலும் ஈடுபடாதவர்கள் கடுமையான சிறைத் தண்டனைக்கு ஆளாவார்கள்.

மேலே சொன்ன காந்திநெறி யன்பர்கள் பல இடங் களில் சமூகசேவை செய்து வருகிருர்கள். தங்களுக்கு. விருப்பம் இல்லாத செயல்களைத் தொண்டு என்ற பெயரால் செய்யும்படி அரசினர் வற்புறுத்தினல் அவற்றைச் செய்ய மறுத்துச் சிறை சென்றவர்களும் உண்டு.

நாங்கள் சென்ற இல்லத்தில் உள்ள நண்பர்கள் அந்த ஒடச் சங்கக் கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள். ஆனல் அதனோடு நேரடித் தொடர்பு இல்லாதவர்கள். அங்கே பன்னிருவர் வாழ்கிருர்கள். மனம் ஒத்து அஹிம்சை நெறியை மேற்கொண்டு நேர்மையாக வாழும் உறுதியுடன் சென்ற நாலரை ஆண்டுகளாக இவர்கள் ஒன்றுபட்டு: வாழ்கிருர்கள்.

அந்த இல்லத்தில் உள்ளவர்களில் ஒருவராகிய காதரின் ஜோமாட் (Catherine Jonard) என்ற பெண்மணி தங்கள் கொள்கையை விளக்கினர். 'எல்லோரும் நாகரிக வாழ்வு. என்று சொல்லிக்கொண்டு வாழ்கிருர்களே, அந்த வாழ்வு எங்களுக்குப் பிடிக்கவில்லை. வேறு வகையில், அமைதி யையே குறிக்கோளாகக் கொண்டு வாழமுடியுமா என்று முயன்று பார்க்கிருேம். சகோதர உணர்ச்சி, நன்மை தீமை களைப் பங்கிட்டுக்கொள்ளும் இயல்பு, கியாயம் ஆகியவற்றை மேற்கொண்டு ஒழுகவேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதை நிறைவேற்றப் பாடுபடுகிருேம்' என்ருர்,

இங்கே உள்ள பன்னிரண்டு பேர்களில் திருமணம் செய்துகொண்ட இரண்டு தம்பதிகள் இருக்கிருர்கள், ஒரு. தம்பதிக்கு இருபது வயசில் ஒரு பெண்ணும் இருக்கிருள். இந்த கால்வரைக் தவிர, மற்றப் பெண்களும்: ஆண்களும் மணமாகாதவர்கள். இந்த இல்லத்துக்குரிய குடிக் கூலி, கிர்வாகச் செலவுகள் முதலியவற்றை யாவரும் பங்கு போட்டுக் கொள்கிருர்கள். தங்கள் தங்கள்