பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அழகுத் திருமாளிகை

அரண்மனை என்ருல் வெறும் கோட்டை கொத்தளங் கள், முடுக்குகள், இடுக்குகள் என்றுதான் நமக்குக் தோன்றும். வர்ஸே அரண்மனையை அப்படிச் சொல்ல முடியாது, இன்பவாழ்க்கை வாழ்வதற்காகவே லூயி மன்னர்கள் அமைத்துக் கொண்ட திருமாளிகை அது. எங்கே பார்த்தாலும் ஒவியங்கள், எங்கே பார்த் தாலும் சி. ற் பங்கள். தரையெல்லாம் வண்ண வண்ணமான கம்பளங்கள்; சுவர்களிலெல்லாம் ஓவியக் கொள்ளே, சிற்பக் கருவூலம்; மேற்கூரைகளில் பிரம்மாண்ட மான சித்திரப்படைப்புகள். கூடங்களும் மன்னர் தங்கும் அறைகளும் கலேயரங்குகளும் பிரெஞ்சு மன்னர்களின் கலை ஆர்வத்தையும் கலையை நுகரும் உள்ளத்தையும் புலப் படுத்துகின்றன. சும்மா பார்த்து வரவேண்டுமானல் குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும். கிதானமாக ஒவ் வொரு நுட்பமான பகுதியையும் கண்டு வரலாற்றையும் கலையியலையும் தெரிந்துகொண்டு வரவேண்டுமானல் மூன்று ஆண்டுகளும் ஆகலாம்.

உலகத் தமிழ் விழாவுக்கு வந்தவர்களைப் பிரெஞ்சு அரசினர், விழா கிறைவேறிய மறுநாள் (9-7-70) வர்லேக்கு அழைத்துச் சென்று காட்டச் செய்தார்கள். தமிழ் விழாவில் பிரெஞ்சு அரசினர் செய்த கைங்கரியம் இது ஒன்றுதான். வர்ஸேல்ஸ் (Versailles) என்று நாம் கூறுவதையே வர்ஸே என்று பிரெஞ்சுக்காரர்கள் சொல் கிருர்கள். நாம் எழுத்துக்களின் உச்சரிப்பை விம்காமல்