பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கண்டறியாதன கண்டேன்

மொரான் என்பவர் 14ஆம் ஆாயிக்கு இதை 1706ஆம் ஆண்டில் காணிக்கையாக வழங்கிரைாம். புரட்சிக் காலத்தில் இதை அழிக்க முற்பட்டார்கள். அப்போது வேறிடத்துக்கு மாறியது. திரும்பவும், பழைய இடத்தில் இதை அமைத்து ஓட விட்டிருக்கிருர்கள்.

கண்ணுடிக் கூடம் (Hall of Mirrors) என்பது மிகவும் புகழ் பெற்றது. முதற் பெரும் போர் நிகழ்ந்த பிறகு கடந்த சமாதான உடன்படிக்கையில் இவ்விடத்தில்தான் கையெழுத்திட்டார்கள். இந்தக் கூடத்தின் நீளம் 238 அடி: அகலம் 35 அடி உயரம் 40 அடி. 1678ஆம் ஆண்டு இதைக் கட்டத் திட்டமிட்டுக் கட்டி ஒவியம் தீட்டினர்கள். 1686ஆம் ஆண்டு முடிவு பெற்றது. இங்கே பதினேழு பெரிய ஜன்னல்கள் இருக்கின்றன. அவற்றின் வழியே பார்த்தால் வெளியே உள்ள பூங்காத் தெரிகிறது.

எல்லாவற்றையும் ஒருவாறு பார்த்தோம். பிறகு அருமையான விருந்துணவு உண்டோம். அப்பால் இந்த அரண்மனைக்கு எதிரே விரிந்து பரந்துள்ள பூங்காவைப் பார்த்தோம். எங்கே பார்த்தாலும் மலர்கள். எங்கே பார்த்தாலும் நீரூற்றுக்கள். நெடுந்துாரத்தில் நீள நீளமான எரிகள். செயற்கையால் அழகூட்டிய இயற்கையைக் கண்டு களித்தோம்.

முழுமையும் கண்டோம் என்றுசொல்ல முடியுமோ? எங்கள் நேரத்துக்கும் சக்திக்கும் ஏற்ற அளவிலே கண்டோம்; ஆனல் அளவில்லாத மகிழ்ச்சியை அடைக் தோம்.

இந்த அரண்மனையில் மன்னர்கள் இன்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள், கடைசியில் மன்னரும் அவர் குடும்பத் தினரும் கொலையுண்டார்கள். அவர்கள் உயிர் நீத்த கொலைக் களம் இது என்று வரலாறு சொன்னலும் இன்று நம் கண்முன் விரிந்த கலைக்களமாக இது கின்று நிலவுகிறது.