பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கண்டறியாதன கண்டேன்

கிறதல்லவா? நம் காட்டுப் பண்பாட்டில் ஆர்வம் கொண்ட, ஹர்வே மூன் (Herve Mium) என்னும் சிற்பி அதில் வாழ் கிருர். பிரமனுடைய வாகனமாகிய ஹம்ஸத்தை கினேந்தே தம்முடைய நீர்வாழ் இல்லமாகிய படகுக்கு அந்தப் பெயரை வைத்திருக்கிருராம். அவர் காதில் பொன் வளையம் அணிந்: திருப்பார். அவருடைய குடும்ப நகை அது. அவருடைய முன்னேர்களெல்லாம் மாலுமிகள். ஹம்ஸத்தில் தங்கும் நான்முகன் படைப்பதுபோல அவரும் பல அரிய சிற்பங் களைப் படைக்கிருர். அவருடைய படகு வீட்டில் கீழிறங்கிப் போய்ப் பார்த்தால் அவர் கைவண்ணத்தைக் கண்டு மகிழலாம். பலபல சிற்ப வடிவங்களே அங்கே வைத்திருக்கிருர். அவர் மண்ணுலும் மரத்தாலும் கல்லா லும் அழகிய வடிவங்களே உருவாக்குகிறவர்.

1940ஆம் ஆண்டில் போர்க் கைதியாகப் பலரை ஜெர்மனிக்குக் கொண்டு சென்ருர்கள். சிற்பி ஹர்வே மூன வேலை செய்யச் சொன்னர்கள். கலைப்பொருளைப் படைக்கும் கையால் வெறும் முரட்டு வேலைகளைச் செய்ய அவர் மறுத்தார். அவரை ஆயுதப் பட்டறையில் வேலை செய்யச் சொன்னர்கள். அழகையும் அமைதியையும் விரும்புபவன் கலைஞன். ஆகவே அவர், 'எனக்கு வேண்டிய உணவைப் பிரெஞ்சு அரசு அனுப்புகிறது. அந்த உணவை எனக்குக் கொடுக்காமல் நிறுத்திவிடுங்கள். அதுபற்றி நான் கவலைப் பட மாட்டேன். போரை வெறுக்கும் என்னேப் படைக் கலக் கொட்டிலில் வேலை செய்யச் சொன்னல் நான் செய்ய மாட்டேன்' என்று உறுதியாகக் கூறிவிட்டார். பிறகு அவர் நோய்வாய்ப்பட்டவரைப் போல இருந்தார். கடைசி யில் அவரை வெளியே விட்டார்கள். பிரெஞ்சுக் கைதி’ களுக்கு அந்த காட்டிலிருந்து உணவுப் பொட்டலங்கள் அனுப்பினர்கள். கைதியாக இருக்கும்போது சிற்பி ஹர்வே மூன் தமக்கு உணவுப் பொட்டலம் வேண்டாமென்றும், அதற்குப் பதிலாகக் களிமண் பொட்டலங்களே அனுப்ப வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாராம். அவ்வாறே, கிடைத்த களிமண்ணேக் கொண்டு அவர் சிறிய சிறிய,