பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியா விடை 17t

வடிவங்களே உருவாக்கினர். அதனல் அவருக்கு இன்பம் உண்டாயிற்று. அவரோடிருந்த கைதிகள் அவர் செயலைப் பார்த்து வியந்தார்களாம். அவர் இந்திய வேதாந்தத்தைப் படித்திருக்கிருராம். அதில் அவருக்கு ஈடுபாடு அதிகம். 1958ஆம் ஆண்டு ஹம்ஸா என்ற படகுவீட்டை அவர் உருவாக்கினர்.

ளின் நதியின் கரையில் உள்ள காட்சிகளைக் காண்பதற்கு மோட்டார்ப் படகுகளை விடுகிருர்கள். இரவு நேரங்கனில் அவற்றில் சென்ருல் ஒளிவெள்ளத்தில் நகரத்தின் முக்கிய மான இடங்களைப் பார்க்கலாம். படகில் அவற்றைப் பற்றி விளக்குவதற்குரியவர்கள் இருக்கிருர்கள். ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் அவர்கள் சொல்கிருர்கள். நானும் என்னுடைய நண்பர்களும் 19-7-70 அன்று இரவு: 9-30 மணி முதல் 10-30 மணி வரையில் ஸின் ஆற்றில் படகில் சென்று காட்சிகளேக் கண்டு மகிழ்ந்தோம்.

20ஆம் தேதி பாரிஸ் மாநகரை அடுத்திருக்கும் ஓரிடத்தில் உள்ள மியூஸியத்தைப் பார்த்து வரலாமென்று அன்பர் திரு நாகசாமி சொன்னர். புத்தகசாலைகளேயும் காட்சிச்சாலைகளையும் பார்ப்பது என்ருல் அன்பர் திரு சா. கணேசனுக்குப் பெரு விருப்பம்; சோறு வேண்டாம்: பார்த்துக் கொண்டே இருப்பார். ஆகவே அவரும் உற் சாகத்துடன் புறப்பட்டார். கார் சேன் லாஜர் (Care Saint Laazre) என்ற ஸ்டேஷனில் ஏறி, சேன் முர்மேன் ஆன் லே (Saint Germain on Laee) Gréir D Grußá ståuuģgiágů போனேம். அங்கே ஒரு காட்சிச்சாலை இருக்கிறது. அதைப் பார்த்தோம். -

அந்த மியூஸியத்தில் மிகப் பழங்காலத்துப் பண்டங் களேவைத்துப் பாதுகாக்கிருர்கள். இரண்டாயிரம் ஆண்டு. களுக்கு முந்திய படைக்கலங்கள், விக்கிரகங்கள், பாத்திரங் கள் முதலியவற்றை அங்கே கண்டோம். நல்ல செம் பவளத்தைப் போலப் பளபளப்பான வண்ணமுள்ள மண் பாண்டங்கள் உள்ளன. எவ்வளவோ முயன்றும் அந்த