பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 கண்டறியாதன கண்டேன்

வண்ணக் கலவையை எப்படி அமைத்தார்கள் என்று புலப் படவில்லையாம். கிரேக்க நாகரிகத்தைச் சார்ந்த வடிவங்கள் அங்கே இருக்கின்றன. . -

மேல்நாட்டுக் காட்சிச்சாலைகளில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்ருல், அங்கே உள்ள பொருள்களே யெல்லாம் படமெடுத்து விளக்கமும் அச்சிட்டு விற்கிருர்கள். சில இடங்களில் வண்ண அச்சில் படங்களை அச்சிட்டு விளக்கம் எழுதிப் புத்தகமாக அமைத்து விற்கிருர்கள். ஆர அமரப் பொருள்களைப் பார்த்து மகிழ்வதோடு, அவற்றை அடிக்கடி கினைவு கூர்வதற்கு ஏற்றபடி அவை இருக்கின்றன.

அங்கிருந்து மறுபடியும் பாரிஸுக்கு வங்தோம். பாரிஸி லுள்ள மியூளியங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும் என்பது ஆசை. மூளி கெமே (Mosee Guinet) என்ற காட்சிச்சாலைக்குப் போனேம். கம்போடியா, தாய் லாந்து, இந்தியா முதலிய கீழ்காட்டு அரும்பழம் பொருள் கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எத்தனை விக்கிரகங்கள்!

சிறிய செப்பு வடிவம் ஒன்றைத் திரு நாகசாமி காட்டி, 'இதைப் பாருங்கள்' என்ருர். குழந்தை வடிவம். தலையில் கொண்டை இடக்கையில் கோழியை இடுக்கிக்கொண்டு கிற்கும் கோலத்தில் அந்த விக்கிரகம் இருந்தது.

'இது என்ன தெரியுமா?’ என்று கேட்டார் நாகசாமி. 'சொல்லுங்கள்’’ என்றேன். 'உங்கள் முருகன்' என்ருர். - உற்றுக் கவனித்தேன். இளமுருகன் கோழியை இடுக்கிக் கொண்டிருக்கிருன். அப்போது எனக்குத் தமிழ் காட்டில் உள்ள வேளுக்குறிச்சி என்ற ஊர்த் திருக்கோயில் கினைவுக்கு வந்தது. கொல்லிமலையைச் சார்ந்த அந்த இடத்தில் ஒரு குன்றில் முருகன் திருக்கோயில் இருக்கிறது. அங்கே முருகன் தலையில் கொண்டையுடன் வேட்டுவக் கோலத்தில் இருக்கிருன். அதோடு தன் கையில் கோழியை