பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கண்டறியாதன கண்டேன்

இப்படியே மாளிகைகளிலும் சாலைகளிலும் பாலங்களிலும் எங்கே பார்த்தாலும் சிற்பம், சிற்பம், சிற்பம்!

பாரிஸில் இன்பம் நுகர எப்போதும் அயல்நாட்டு

மக்கள் வந்துகொண்டே இருக்கிருர்கள். அவர்கள் தங்க வசதியான விடுதிகளும், சுவையான உணவுகளைப் படைக்கும் உணவுச் சாலைகளும் ஏராளமாக இருக்கின்றன. நாம் என்னவோ அறுசுவை உண்டி, அது இது என்று பெருமையடித்துக் கொள்கிருேம். அங்கே உண்டி வகை களுக்குக் கணக்கு வழக்கில்லே. குழம்பு, ரஸம், மோர் இந்த மூன்றுக்குள்ளே நம்முடைய உணவு முறை அடங்கி விடுகிறது. அங்கே பத்து, பன்னிரண்டு, பதினேந்து என்று முறைகள் (Courses) இருக்கின்றன. ஆர அமர இருந்து பேசிச் சிரித்தபடி மூன்று மணி நேரங்கூட உண்ணு' கிருர்கள். அதைப் பார்த்தால் அவர்கள் உண்பதற்காகவே பிறந்தவர்களோ என்று தோன்றுகிறது.

மதுவைப் பற்றிய ஆராய்ச்சியிலும் அதுபவத்திலும் பிரெஞ்சுக்காரர்களே மிஞ்சினவர்கள் யாரும் இல்லை. அங்கே மது தண்ணீர் பட்ட பாடு. விதவிதமான கிறமுடைய மது உண்டு. இன்ன நிறம், இன்ன தன்மையை உடையது என்று மதுவின் இலக்கணத்தை வகுத்திருக்கிருர்கள். பெரும்பாலும் எங்கே உண்டாகிறதோ அந்த இடத்தினல் மதுவுக்குப் பெயர் வைத்திருக்கிருர்கள். பர்கண்டி, வடிம்பேன் போன்ற பெயர்களெல்லாம் இடங்களின் பெயர்கள்.

சங்க காலத்து நூல்களில் பல வகை மதுக்களைப்பற்றிய செய்திகள் வருகின்றன. காளாது ஆக அவற்றிற்கு வெறி யூட்டும் திறம் மிகுதி. "தேட்கடுப் பன்ன காட்படு தேறல்' என்று ஒரு புலவர் பாடுகிரு.ர். .

பாரிளில் பழைய மதுவுக்குக் கிராக்கி அதிகம். "கின்றன் மோடி கிறுக்குதடி தலையை-மொங்தைப் பழைய கள்ளப் போலே" என்று பாரதியும் பாடுகிரு.ர்.