பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியா விடை 175

தொண்ணுாறு ஆண்டுகள் முதிர்ந்த மதுக்கூட இருக்கிறதாம். ஐந்து வருஷமாவது புளிக்காத திராட்சை மது. மது என்று சொல்லக்கூடத் தகுதியற்றதாம்.

மதுச் சாடிகளை வைத்திருக்கிற இடத்தில் ஒரே சிலந்தி வலையாக இருக்குமாம். எல்லாவற்றையும் ஒழுங்காகவும் அழகாகவும் வைத்திருக்கும் பாரிஸ்காரர்கள் மதுப் பாண்டங்களைச் சேமித்து வைக்கும் இடத்தை மாத்திரம் சிலந்தி வலை பின்னும்படி விடலாமா? அதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. நாளாக ஆக மது புளித்துப் போகிறது. என்னதான் பாதுகாப்பாக இறுக மூடி வைத்தாலும் ஈக்கள் வந்து மொய்க்கும். அந்த ஈக்களைச் சங்காரம் பண்ணச் சிலந்தி வலைகளை அழிக்காமல் விட்டு வைக் கிருர்களாம். பாவம்! மது மணத்தால் கவரப்பெற்ற ஈக்கள் சிலந்தி வலையில் அகப்பட்டுக் கொள்கின்றன. மணத்தை நுகரும் ஈக்களுக்கே இந்தப் பாடு என்ருல் மதுவையே நுகரும் மக்கள் எந்த எந்த வலையில் விழுகிருர்

களோ!

பழம் பொருள்களே வாங்கிச் சேகரிப்பதில் பிரெஞ்சுக் காரர்களுக்கு மோகம் அதிகம். அவற்றை விற்கும் கடைகள் அங்கே பல இருக்கின்றன. நம் காட்டு விக்கிரகங்களே லட்சம், இரண்டு லட்சம் என்று கொட்டிக் கொடுத்துவிட்டு மேல்நாட்டுக்காரர்கள் வாங்கிப் போகிற செய்தியை அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கிருேமே! -

பாரிஸில் உள்ள ஒரு கிழவி இரண்டு உலகப் பெரும் போரையும் பார்த்தவள். 'அந்தப் போர்க் காலங்களில் நீங்கள் எப்படி வாழ முடிந்தது? எப்படிச் சமாளித் .திர்கள்?' என்று ஒருவர் அவளேக் கேட்டாராம்: 'மூன்ருவது உலகப் பெரும் போர் மூண்டாலும் எனக்குச் சங்கடம் இல்லை; எனக்கு வாழ்க்கைக்கு வேண்டியதைச் சம்பாதிக்கத் தெரியும்' என்ருளாம்.

"எப்படி?”