பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கண்டறியாதன கண்டேன்

ஏற்றிக்கொண்டு செல்லுமளவுக்குப் பிரம்மாண்டமான விமானங்கள் உண்டு. எத்தனே வகை விமானங்கள் உலகில் உண்டோ அத்தனையையும் ஹீத்ரோ விமான கிலேயத்தில் பார்க்கலாம். கிமிஷத்துக்கு கிமிஷம் விமானங்கள் புறப்படுகின்றன. அவற்றைப் பற்றிய அறிவிப்புகள் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

விமான கிலேயத்திலிருந்து, விமானப் பயணிகள் நகரி லிருந்து புறப்பட அமைந்துள்ள இடத்துக்கு (Air Terminal) கோச்சில் ஏறி வந்தோம். பி. ஒ. ஏ. சி.(BOAC)க் காரர்கள் இந்தக் கோச்சுக்களே இயக்குகிருர்கள். ஆள் ஒன்றுக்கு ஏழு வில்லிங் வாங்குகிருர்கள். நாங்கள் கையில் இருந்த பணத்தில் ஒரு பகுதியை ஆங்கில நாணயமாகிய ஸ்டெர்லிங்காக மாற்றி வைத்திருந்தோம். ஏதோ ஒரு கோட்டை எடுத்துக் கோச்சுக் கண்டக்டரிடம் கொடுத் தோம். அவர் கட்டணம் போக மிச்சத்தை எங்கள் கையில் தந்தார். இதுவரையில் பவுன், ஷில்லிங், பென்ஸ் என்ற கணக்கு இங்கிலாந்தில் இருந்து வந்தது. 12 பென்ஸ் ஒரு ஷில்லிங், 20 வில்லிங் ஒரு பவுன் என்ற பழைய வாய்பாடு நமக்கெல்லாம் நெடுகாளைப் பழக்கம். இப்போது தசாம்ச காணய முறை அமலுக்கு வந்திருக்கிறது. ஆகவே புதிய வில்லிங் வந்திருக்கிறது. இந்தத் தட்டுக்கெடலில் சிலர் ஏமாந்து போவதும் உண்டென்று தெரிய வந்தது.

நானும் அன்பர் நாகசாமியும் ஏமாந்து போனுேம். கோச்சில் ஏறிய பிறகு எங்கள் கையில் கண்டக்டர் தக்த சில்லறையை எண்ணிப் பார்த்தோம். அவர் 14 வதில்லிங் எடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு பேருக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டிருக்கலாமோ என்று சந்தேகம் உண்டா யிற்று. அப்படி இல்லே: ஒவ்வொருவரிடமும் 14 வதில்லிங் எடுத்துக் கொண்டிருந்தார். வண்டியோ புறப்பட்டு விட்டது. எங்களுக்கு டிக்கட் கொடுத்தவர் விமான கிலேயத் திலே கின்றுவிட்டார். யாரிடம் இதைச் சொல்வது? எங்கள் கணக்குத்தான் பிசகோ என்று எண்ணி, அருகில் இருந்த