பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கண்டறியாதன கண்டேன்

யில் வேலை செய்துகொண்டே மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்தார்.

இந்தியர்களால் கிர்வகிக்கப்படுகிறது, இந்தியன் ஒய். எம்.வி.ஏ.இங்கே உள்ள அறைகளில் பெரும்பாலும் இந்தியர் களே தங்கியிருக்கிருர்கள். மற்றவர்கள் அவ்வப்போது வந்து போகிருர்கள். மாளுக்கர்களே பெரும்பாலும் இங்கே தங்கி யுள்ளார்கள். காங்கள் போன காலம் கோடை விடுமுறை. ஆகையால் மானக்கர்கள் வெளியே போய்விட்டார்கள். அவர்களுக்கு நாள்தோறும் தென்னிந்தியச் சாப்பாடு கிடைக்கும். காலையில் உப்புமா, இட்டிலி, ரொட்டி எல்லாம் கிடைக்கும். வெள்ளிக்கிழமையன்று நிச்சயமாக இட்டிலி உண்டு. விடுமுறைக் காலம் ஆகையால் பகல், இரவு நேரங்களில் உணவு வழங்கவில்லை. காலையில் மட்டும் சிற்றுண்டி வழங்கினர்கள்.

86ஆம் எண்ணுள்ள அறையில் நான் தங்கினேன். ஒரு காளேக்கு 25 வில்லிங் வாடகை, உத்தரவாதப் பணமாக 10 ஷில்லிங் கொடுக்க வேண்டும். அறையைக் காலி செய்யும் போது அதைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

அன்பர் நாகசுப்பிரமணியத்தின் அறைக்குப் போனேன். அவர் என் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார், அவரோடு அவர் தமையனர் திரு நாகநாதனும் வேறு சில: அன்பர்களும் இருந்தார்கள். நாகநாதன் தனியே ஒர் இடத்தில் வசிக்கிருர். அந்த இடத்தில் சமையலறையும் மற்ருேர் அறையும் இருக்கின்றன. அவரே சமைத்துச் சாப்பிடுகிருர்,

அறையில் சாமான்களே வைத்துவிட்டு வெளியில் சிறிது நேரம் போய்வரலாமென்று நண்பர்களுடன் புறட்பட்டேன். லண்டனுக்கு வந்தது ஏதோ சொந்த ஊருக்கு வந்தது போன்ற உணர்வைத் தந்தது. வீதியில் கடந்துகொண்டே இருமருங்கும் உள்ள காட்சிகளைக் கண்டேன். பம்பாயிலோ, டில்லியிலோ உலாவுவதைப்போல இருந்தது. பாரிஸில் வண்டிகள் வலப்பக்கமாகவே சென்றன. மற்ற நாடுகளிலும்