பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டனே அடைந்தேன் 181

அப்படித்தான். ஆனல் இங்கோ நம் ஊரைப்போல இடப் பக்கமாகவே சென்றன. நம் ஊரைப்போல என்று சொல்வது தவறு. பிரிட்டிஷாரின் நாகரிகத்தைப் பின்பற்றி காம் இடப் பக்கப் போக்குவரத்தை மேற்கொண்டு வருகிருேம் என்று சொல்வதுதான் முறை. அங்கே கண்ணில் பட்டவர்களெல் லாம் இங்கிலீஷ்காரர்கள்; எல்லோரும் இங்கிலீஷ் பேசி ர்ைகள். பாரிஸில் இங்கிலீவுைக் கேட்பது அருமையிலும் அருமை. வாயிருந்தும் ஊமையாய், காதிருந்தும் செவிடாய். வெறும் ஜாடைமாடைகளால் பேசவேண்டியிருந்தது அங்கே. அப்பாடா! இங்கே நாம் வாயில்ை தாராளமாகப் பேசலாம்; பிறர் புரிந்து கொள்கிருர்கள். காதினல் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்; இங்கிலீஷ் பேச்சுத்தானே எங்கும்: புதிய உணர்ச்சி வந்ததுபோல இருந்தது. பாரிஸில் எல்லாம் அதிசயம், எல்லாம் பிரமிப்பு: இங்கே வியப்பும் எழுச்சியும் தோன்றிலுைம், பலகாலமாகப் பழக்கப்பட்ட இடத்துக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்பு வந்தது போன்ற எண்ணமே உண்டாயிற்று, இந்தியாவில் இங்கிலீஷ்காரர் களப் பார்த்திருக்கிருேம்; அவர்களுடைய பழக்க வழக்கங் களை ஒரளவு அறிந்திருக்கிருேம், புத்தகங்களில் அவர்களைப் பற்றியும் லண்டனப்பற்றியும் கிரம்பப் படித்து அறிந்திருக் கிருேம். ஆகவே பாரிஸைப்போல இது முற்றும் அயல் ஊராக, அறிமுகமே இல்லாத இடமாகத் தெரியவில்லை. அதோடு இங்கே இந்தியர்களே. அவர்களிலும் தமிழர்களே, அங்கங்கே சந்திக்க முடிகிறது, பேச முடிகிறது அல்லவா?

கடந்துகொண்டே இருந்தபோது ஒரு டவரைப் பார்க் தேன். மிக மிக உயரமாக இருந்தது அது.

'இது என்ன? சென்னையில் உள்ள கலங்கரை விளக்கக் கோபுரத்தைவிட எவ்வளவோ மடங்கு உயரமாக இருக் கிறதே!' என்று கேட்டேன். -

“@ggrór GLIrovil so fan Lair (Post Office Tower)" என்ருர் அன்பர். அதைப்பற்றிய விவரமும் சொன்னர். க்ளிவ்லண்ட் தெருவில் இருக்கிறது அந்தக் கோபுரம். 619.