பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சண்டறியாதன சண்டேன்

அடி உயரம் உடையது. லண்டனுக்குள்ளும் மற்ற இடங் களுக்கும் தொலைபேசி மூலம் செய்திகளே அனுப்புவதற். குரிய அமைப்புக்களே இங்கே உச்சியில் அமைத்திருக் கிருர்கள். டெலிபோன், டெலிவிஷன் ஆகியவற்றை இயக்கும் நிறுவனம் இங்கே இருக்கிறது. இதன் மேல் எறிப்பார்த்தால் லண்டன் மாநகரம் முழுவதையும் பார்க்க லாமாம். பக்கத்தில் போய் அண்ணுந்து பார்த்தால் கழுத்துத் தான் வலிக்கும். சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது எத்தனை அழகாக இருக்கிறது மனிதன் நாகரிகத்திலும் அறிவிலும் உயர்ந்து வருகின்ருன் என்பதற்குரிய சின்னம் போல இந்தக் கோபுரம் கிற்கிறது.

மாலை நேரம் ஆகிவிட்டபடியால் கடைகளே மூடியிருந் தார்கள். அந்தப் பகுதி அமைதியாக இருந்தது. அதிகப் போக்குவரத்து இல்லை. அன்பர் நாகநாதன் தம்முடைய இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்று சில சிற்றுண்டிகள் தந்தார். அவரே செய்தவை அவை. -

காகங்ாதனுடன் பேசிக்கொண்டிருந்தேன். கோடைக் ாலமாதலால் குளிரே தெரியவில்லை. இடையில் கதர் வட்டியும் மேலே ஜிப்பாவும் காலில் செருப்பும் அணிந்து டந்து சென்றேன். இதைக் கண்ட நாகநாதன் என்னேப் பாராட்டினர், 'இந்தியர்கள் இங்கே வந்தால் வெள்ளைக் காரர்கள் மாதிரி வாழவேண்டுமென்று ஆசைப்படுகிருர்கள். இந்தியாவில் கல்லவர்களாகக் காட்டிக் கொண்டு இங்கே வந்து பண்ணுத அக்கிரமங்களையெல்லாம் பண்ணுகிருர்கள். அவர்களைக் கண்டால் இங்குள்ளவர்கள் மதிப்பதில்லை. தங்கள் தங்கள் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொள்கிறவர். களை இங்கே நன்கு மதிக்கிருர்கள். மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இங்கே இருக்கிருர்கள். சோம்பேறித் தனமே இல்லை. உழைப்புக்குப் பெருமை அளிக்கிருர்கள். கம் ஊரில் சாதி, சமயம், அது, இது என்று எத்தனை வித்தி பாசம் எவ்வளவு உழைத்தாலும் கீழ்ச்சாதியென்று மட்டக் தட்டுகிருர்கள். பணக்காரன் சோம்பேறியாக இருப்பது