பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டனே அடைந்தேன் 183

தான் லட்சணம் என்று எண்ணுகிரு.ர்கள். என்றைக்கு நம்முடைய நாடு உருப்படப் போகிறதோ, தெரியவில்லை” என்று அங்கலாய்த்தார்.

'கம்முடைய அறியாமையும் அவல வாழ்வும் இருக் கட்டும். இங்குள்ள மக்களின் நிலையைப்பற்றிச் சொல் லுங்கள், கேட்கலாம்' என்றேன்.

"இங்கே வேலையில்லாத் திண்டாட்டமே இல்லை. பல இடங்களில் வேலைக்கு ஆள் வேண்டும்’ என்ற விளம் பரத்தை மாட்டியிருப்பார்கள்.”

'அப்படியா? நம் ஊரில் 'வேலை காலியில்லே' என்ற போர்டைத்தானே பார்க்கிருேம்?"

"விமான ஒட்டிகள், ரெயில் டிரைவர்கள் வேண்டும் என்று பல இடங்களில் விளம்பரம் செய்திருக்கிருர்கள். உழைப்புக்குத் தக்க ஊதியம் இங்கே கிடைக்கிறது. இது வள வாழ்வு பெற்ற நாடு (Welfare State). யாருக்காவது வேலே தக்கபடி கிடைக்காமல் இருந்தால் அவர்களுக்கு மாசம் ஆறு பவுன் தருகிருர்கள். வயசானவர்களுக்குப் பென்ஷன் தருகிருர்கள். அவர்களுக்கு வீடு தேடிக் கார்டு வரும். அதைக் காட்டி எந்தப் பாங்கிலும் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.'

வேலையிலிருந்து ஒய்வுபெற்றும், இன்னும் பென்ஷன் பெற முடியாமலும் அதற்குரிய கணக்கு வழக்குகள் தீராம லும் திண்டாடும் பலர் நம் காட்டில் இருப்பதை அறிவேன். பென்ஷன் பணம் பெறுவதற்குள் அவர்கள் படும் பாடு ஆண்டவனுக்கே தெரியும்.-இதுதான் இந்தியா. வேலை இல்லாதவருக்கும் பென்ஷன் பெறுவோருக்கும் உரிய பணச் சிட்டு அவர்களைத் தேடிக்கொண்டு வருகிறது.-இது இங்கி லாந்து! ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு அது சாதாரண நடைமுறை. நமக்கு வரங்கள் எல்லாவற்றி லும் பெரிய வரம்! -

"இங்கே பியூன் என்றவர்க்கமே இல்லை. தெரியுமோ!'