பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர்வ நகரம் 13:

யிருந்தால் ஏர் இந்தியா அலுவலகத்தில்தான் கொடுத் திருப்பார்கள். எனக்கு அங்குள்ள அதிகாரிகளைத் தெரியும். விசாரித்துக்கொள்ளலாம். இப்போதைக்கு வீட்டுக்குப் போய்த் தூங்கலாம்; வாருங்கள்' என்ருர்.

'ஆம்! அதுதான் சரி!' என்று எனக்குத் தோன்றியது. ஏதேனும் ஒரு சங்கடம் எழுந்தால் அதை மாற்றுவற்குரிய வழிகளைத் தேடி முயற்சி செய்ய வேண்டுமேயன்றி, வந்து விட்டதே என்று கவலைப்படக்கூடாது என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். இடர்ப்பாடு வந்தால் ஒன்றும் செய்யாமல் கம்மா இருப்பதும் தவறு: வந்து விட்டதே என்று அதை கினை த்துக்கொண்டு அங்கலாய்டு பதும் தவறு: உடனடியாக அதற்குப் பரிகாரம் ஏதாவது, உண்டா என்று யோசித்து அதைச் செய்ய முற்பட. வேண்டும். இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்க முயல்பவன் நான். ஆகவே, செய்யக்கூடியதைச் செய்அதி விட்டோம். இனிக் கவலையின்றித் தூங்கலாம். ஹெல்த் சர்ட்டிபிகேட் காலக்குள் எப்படிக் கிடைக்கும் என்று. இருந்த ஏக்கத்தைப் போக்க ஒரு வழி கிடைத்ததே! அது ம்ே கையில் வந்து சேரவும் ஆண்டவன் அருள் புரிவான் என்று. எண்ணி உறவினருடன் அவர் வீடு சென்று தங்கினேன். அவர் பெயர் எஸ். சீனிவாசன். பாலும் பழமும் உண்டு. படுத்தேன். ஓரளவு உறங்கினேன். -

இயற்காலயில் எழுந்து அஜந்தா ஹோட்டலுக்கு: சென்ருேம். இரவு உடல்நலச் சான்றிதழ் சென்னையி: லிருந்து பம்பாய் விமான கிலேயத்துக்கு வந்திருந்தால் கிலேய அதிகாரிகள், நான் அஜந்தா ஹோட்டலில் தங்கியிருப்பேன் என்பதை அறிந்து அதை இரவே ஹோட்டல்காரர்); கொடுத்து, எழுந்தவுடன் காலேயில் என்னிடம் கொடுக்கச் சொல்லியிருக்கலாம் அல்லவா? ஹோட்டலில் விசாரித்தேன். யாரும் ஏதும் கொடுக்கவில்லை என்ருர்கள். பையை

எடுத்துக்கொண்டு விமான கிலேயம் சென்ருேம்.