பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I34 கண்டறியாதன கண்டேன்

'டவாலிச் சேவகன் இல்லாமல் ஆபீஸ்களில் வேலை எப்படி கடக்கும்!"

"அதை நீங்களே பார்க்கப்போகிறீர்கள். உத்தியோகம் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள் வார்கள். பியூனுக்கு வேலையே இல்லை."

இங்கேயோ-: ஏதாவது அலுவலகத்தை எண்ணிப் பாருங்கள். வில்லைச் சேவகர்கள் தயவு இல்லாமல் உள்ளே போக முடியுமா? தலைமைச் செயலகத்துக்குப் போனல் எத்தனை பேர்கள் வந்து மொய்த்துக் கொள்கிருர்கள்! எங்கள் ஆசிரியப் பெருமான் ஓரிடத்தில் எழுதியிருக்கிறது கினேவுக்கு வருகிறது. ஜெனரல் ஆஸ்பத்திரியிலுள்ள சேவகர்களேப்பற்றி எழுதியிருக்கிரு.ர்கள். அங்கே சேவகர் கையில் ஏதாவது அழுத்தினல் எளிதில் உள்ளே போய் விடலாம்; இல்லாவிட்டால் போக முடியாது. அவர்கள் தயவு இல்லாமல் உள்ளே நுழைகிறவன் ஒரே ஒருவன்தான். அவன்தான் யமன்!”

'நீங்கள் எனக்கு லண்டனில் பார்க்க வேண்டிய இடங் களே யெல்லாம் காட்டவேண்டும். எந்த இடங்களைப் பார்க்க வேண்டுமென்பது உங்களுக்குத்தான் தெரியும்' என்று வேண்டிக்கொண்டேன்.

"ஜமாய்த்துவிடலாம். இப்போது போய்க் கவலே. இல்லாமல் படுத்துத் தூங்குங்கள்."

எங்கள் விடுதிக்கு வந்து 11-30 மணிக்குப் படுத்து உறங்கலானேன். -