பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிட்டிஷ் மியூஸியம் 187°

அவர் பல நூல்களையும், வரலாற்றுச் சிறப்புடைய பல பழம்பொருள்களையும். ஒவியங்களையும் சேகரித்து வைத் திருந்தார். அவற்றை அவர் காட்டுக்குப் பொதுச்சொத்தாக வழங்க முன்வந்தார். இருபதியிைரம் பவுன் கொடுத்தால் தருவதாகச் சொன்னர், இரண்டாம் ஜார்ஜ் மன்னர் அரசராக இருந்த காலம் அது. பார்லிமெண்டில் 1753ஆம் ஆண்டு ஒரு சட்டத்தை இயற்றி அந்தப் பொருள்களே ஏற்று அவற்றைப் பாதுகாக்க ஒரு குழுவை நியமித், தார்கள். எலிஸபெத் அரசி காலத்திலும் முதலாம் ஜேம்ஸ் காலத்திலும் ஸர் ராபர்ட் காட்டன் (1571-1631) என்பவர் தொகுத்து வைத்திருந்த நூல்களையும் பழம் பொருள்களையுங்கூட அந்த ஆட்சிக் குழுவினரிடம் ஒப் படைத்தார்கள். நாளடைவில் வேறு பல பொருள்களும் சேர்ந்தன. r

வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள காட்டன் ஹவுஸ் என்ற இடத்தில் இவற்றையெல்லாம் வைத்துப் பொதுமக்கள் காணும் வசதிகளைச் செய்து காட்சிச் சாலையாகச் செய் தார்கள். இதற்கு ஏற்ற வகையில் சட்டத்தையும் இயற்றி னர்கள். ராபர்ட் ஹார்லி என்பவரும் (1661-1724). அவருடைய மைந்தரும் தொகுத்து வைத்திருந்த பல நூல்கள் அடங்கிய நூலகமும் இதைேடு இணக்கப்பட்டது. இப்படியே வளர்ந்து வந்து, பல இடங்களில் மாறி இப்போ துள்ள இடத்திற்கு வந்திருக்கிறது. மாண்டேகு இல்லம் என்ற பெயரோடு நிலவிய இந்த மாளிகை நாளடைவில் விரிந்து பல மாற்றங்களே அடைந்து இப்போதுள்ள பிரம் மாண்டமான வடிவத்தை அடைந்திருக்கிறது.

1881ஆம் ஆண்டில் தாவரம், பிராணிகள் ஆகியவை அடங்கிய இயற்கைப் பொருள்கள் கொண்ட பகுதியைத் தென் கென்ஸிங்டனில் உள்ள தனி இடத்துக்கு மாற்றி ர்ைகள். -

கீழ்த்தளமும் மேல் மாடியுமாகிய இரண்டு இடங் களிலும் பல பல பகுதிகளாகப் பிரித்துக் காட்சிப், பொருள்களை இங்கே வைத்திருக்கிருர்கள்.