பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிட்டிஷ் மியூளியம் 1895

ஏழாம் எட்வர்டு மாளிகை என்ற இடத்தில் முதல் மாடியில் மனித இன வரலாற்றைக் காட்டும் அற்புதமான காட்சிகளைக் கண்டு மகிழலாம். அதன் மேல்தளத்தில் ஒவி. யங்களை வைத்திருக்கிருர்கள்.

இந்த மியூஸியம் இரண்டாவது உலகப் பெரும்போரில்: சிதைவுற்றதாம். இப்போது சிதைவையெல்லாம் செப்பஞ். செய்து அழகாக அமைத்துவிட்டார்கள்.

மகாகவி ஷேக்ஸ்பியரின் நாடகங்களை முதல்முதலாக 1623 ஆம் ஆண்டு அச்சிட்டார்கள். அந்த முதற் பதிப்புப் பிரதி ஒன்று இந்த அற்புதச் சாலையில் இருக்கிறது. பதினேந்தாவது நூற்ருண்டில் அச்சிட்ட புத்தகங்கூட இங்கே உண்டு. மூன்ருவது ஜார்ஜ் வைத்திருந்த நூல கத்தின் நூல்களேக் கொண்டு வைத்துத் தொடங்கிய இட மாதலின் கிங்க்ஸ் லேப்ரெரி (அரசர் நூலகம்) என்ற பெயர் ஒரு பகுதிக்கு ஏற்பட்டதாம். கூட்டன்பர்க் (Gutenberg). என்பவர் முதல்முதலாகக் கண்டுபிடித்த அச்சுப் பொறியில் அச்சிட்ட பைபிள் இங்கே இருக்கிறது. அச்சிட்ட தமிழ்ப் புத்தகங்கள் கிட்டத்தட்ட 20,000 இங்கே இருக்கின்றன என்றும், 100 ஓலைச்சுவடிகளும் உண்டு என்றும் சொன் ஞர்கள். சீனப் பகுதியில் கையெழுத்துப் படிகளும் அச்சிட்ட புத்தகங்களுமாக 6000 இருக்கின்றனவாம்.

ஓராண்டு லண்டனில் தங்கி கிதானமாகப் பார்த்தால் இந்தக் காட்சிச்சாலையை ஓரளவு நுட்பமாகப் பார்த்துப் பயன்பெற முடியும். உலகத்தின் பல்வேறு நாகரிகங்களே உணர்ந்து நம் அறிவை வளப்படுத்திக் கொள்ளலாம். சில: மணி நேரங்களில் எதை என்று பார்ப்பது? இந்தியச் சிற்பப் பகுதி, எகிப்தியச் சிற்பப்பகுதி ஆகிய இரண்டை. மட்டும் ஒரளவு பார்க்க முடிந்தது.

கி. மு. இரண்டாவது நூற்ருண்டில் வாழ்ந்த ஒரு மனிதனை அவன் முழு உருவத்திலே கண்டேன். அவனுடைய தோலின் நிறம், கை, கால், முகம் எல்லா வற்றையும் பார்த்தேன். புதை குழியிலிருந்து அப்படியே