பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* *...

.* 3.”

20 ஓவிய மாளிகை میبر:

தி

L'ésirlos' sitásáo (Piccadilly Circus) grair, p. பெயரை ஆங்கில நாவல்களில் படித்திருக்கலாம். இந்தச் சின்னச் சதுக்கம் மாலையிலும் இரவிலும் உல்லாசமாகப் பொழுதுபோக்கும் இடமாக இருக்கிறது. இந்த இடத்தின் நடுவில் உயர்ந்த கம்பத்தின்மேல் மன்மதன் உருவச்சிலை இருக்கிறது. கீழே நீரூற்றுக்கள் உள்ளன. இங்கே மாலை கேரத்தில் மன்மத பாணத்தால் வருந்துகிறவர்கள் வருவார் களாம். அழகிய மகளிரும் மயலுழந்த கட்டிளங் காளேயரும் சந்திக்கும் இடம் என்ருர்கள். என்னே அழைத்துச் சென்ற நண்பர், "இதைப்பற்றி வேடிக்கை யாக ஒன்று சொல்வார்கள். Pick a lady' என்பதே பிக்காடிலி ஆயிற்ரும். இந்தச் சூழல் அத்தகையது” என்ருர். அதை ஆராய்ச்சி செய்ய நேரம் இல்லை: மனமும் இல்லை. சிறிது நேரம் அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்து. விட்டுப் போனேம். - -

அடுத்தபடி டிரஃபால்கர் சதுக்கம் (Trafalgar Square) போனுேம், அங்கே மாலை வேளைகளில் பலர் கூடுகிருர்கள். மாவீரனுகிய கெல்ஸனுடைய உருவம் மிக உயர்ந்த துரணின்மேல் கிமிர்ந்து கிற்கிறது. தூணின் உயரம் கிட்டத்தட்ட 185 அடி, நெல்சன் உருவச்சிலையின் உயரம் 18 அடி. நெல்சன் பெற்ற வெற்றியின் அறிகுறியாக இந்தத் தானும் சிலேயும் நிறுவப் பெற்றன. கம்பத்தின் அடியில் வெண்கலத்தாலான பெரிய சிங்கங்கள்