பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翟4 கண்டறியாதன கண்டேன்.

திரு சீனிவாசன், யாரேனும் பைலட் சான்றிதழை வாங்கி வந்தாரா என்று சிலரை விசாரித்தார். வந்ததாகத் தெரியவில்லை. மேல் அதிகாரிகளே விசாரிக்கலாம் என்று அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்ருர்.

நான் டிக்கட்டுகளைத் தணிக்கை செய்யும் இடத்துக்கு முன் கின்றுகொண்டிருந்தேன். யார் எப்படிக் கொண்டு வந்து கொடுப்பார்களோ என்ற சிந்தனையில் மூழ்கி .யிருந்தேன்.

அந்தச் சமயத்தில் யாரோ ஒருவர், 'வாசுதேவன்! வாசுதேவன்' என்று பலமாக அழைத்துக்கொண்டு வந்தார்; அவருடன் மற்ருெருவரும் இருந்தார். இருவருமே யாரையோ தேடிக்கொண்டிருக்கிருர்கள் என்று தோன்றியது. விமானங்களுக்குப் போகிறவர்களும், விமானங்களிலிருந்து வந்தவர்களும், வழியனுப்பவும் வரவேற்கவும் வந்த நண்பர்களுமாகப் பம்பாய் விமான நிலையத்தில் கூட்டம் நெரிந்தது. இரவு விமானம் வந்திருக்கும். வந்து சில மணி நேரம் ஆகியிருக்கும். ஆலுைம் எனக்கு வரவேண்டியது வந்து சேரவில்லை.

'வாசுதேவன்!" என்று அழைத்துக்கொண்டு வந்தவர் என் அருகில் வந்து, 'நீங்கள் வாசுதேவன?' என்று கேட்டார். அவர் என்னத் தமிழரென்று என் உடையில்ை அறிந்துகொண்டு தமிழில் கேட்டார். அவரும் அவருடன் இருந்தவரும் தமிழர்கள் என்பதை அறிந்துகொண்டேன். "நான் வாசுதேவன் அல்ல; ஆனல் வாசுதேவருடைய பிள்ளை' என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, 'ஏன், எதற்காகத் தேடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். « v

"கி. வா. ஜ. வின் ஹெல்த் சர்ட்டிபிகேட்டை வாசுதேவன் என்பவர் கொண்டுவந்திருக்கிருர். அதை வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்காகத் தேடுகிருேம்' என்ருர் ஒருவர். * : * :