பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவிய மாளிகை 195

முதலில் ஓவியச்சாலையைப் பாதுகாக்க ஒரு பொறுப் பாளியும் செயலாளரும் இருந்தார்கள். பிறகு ஒரு குழுவே அதன் ஆட்சியை மேற்கொண்டது. நாளடைவில் பலர் தங்கள் ஒவியங்களே இந்தச் சாலைக்கு வழங்கினர்கள். பல ஒவியங்களே விலைக்கு வாங்கினர்கள். பழைய இடம் போதாமையால் இப்போதுள்ள இடத்துக்குக் கொண்டு வந்தார்கள். இந்தச் சாலே நல்ல முறையில் அமைக்கப் பெற்றது. நாளடைவில் இதிலும் பல திருத்தங்களைச் செய்து, ஒவியங்கள் கெடாமல் பாதுகாக்கும் வகையில் பல அமைப்புக்களே இணைத்திருக்கிருர்கள். -

இந்தச் சாலையைக் கவனித்துப் பாதுகாக்கும் பணியை முதலில் மற்றவர்கள் ஏற்றுக் கொண்டாலும், பிறகு ஒவிய வல்லுநர்களே இதன் இயக்குநராக வந்தார்கள். அவ்வாறு, முதலில் வந்தவர் ஸர் சார்லஸ் லாக் ஈஸ்ட்லேக் (Sir Charlee Lock Eastlake) என்பவர். அவர் 1855 ஆம் ஆண்டில் பணி செய்யப் புகுந்தார். அவர் ஐரோப்பாவில் பல இடங் களுக்குச் சென்று பார்த்துப் பார்த்து அங்கங்கே உள்ள சிறந்த ஒவியங்களே வாங்கிக்கொண்டு வந்து சேர்த்தார். பத்து ஆண்டுக் காலத்தில் அவர் 137 ஒவியங்களைச் சேர்த்தார்.

ஒவியங்களின் விலை வர வர அதிகமாயிற்று. அமெரிக்கர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒவியங்களே வாங்கினர்கள். பிரிட்டிஷ் அரசினர் ஓவியம் வாங்குவதற்குப் போதிய நிதியை ஒதுக்க முடியவில்லை. இந்த நிலையை அறிந்து, எப்படியேனும் ஓவியக் கருவூலங்களைச் சேகரித்துக் காப்பாற்ற வேண்டுமென்ற ஆர்வமுள்ள பலர் சேர்ந்து, s&O- LuzörLuh GSTGšGh 5 F (National Art-Collection IFund) என்று ஒரு கிறுவனத்தை 1903ஆம் ஆண்டில் அமைத்துக் கொண்டார்கள். பல பெருமக்கள் பெரும் பொருளே வழங்கினர்கள். வெளிநாட்டுக்கு நல்ல ஒவியங்கள் போகாமல் தடுக்கவே இந்த கிறுவனம் தோன்றியது. இதன் முயற்சியால் சிறந்த ஒவியங்கள் பல இந்த ஓவியச்