பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கண்டறியாதன கண்டேன்.

சாலைக்குக் கிடைத்தன. தன் பெயரைச் சொல்லாமல் ஒரு பெண்மணி நாற்பதியிைரம் பவுன் தந்தாளாம்! அவர் களுடைய கலையார்வத்தை எவ்வாறு புகழ்வ து!

லியார்னடோ டா விஞ்சி, வான்டைக், வர்மீர் முதலிய. உலகப் பிரசித்திபெற்ற ஒவிய மணிகளின் அற்புதச் சித்தி ரங்களை இந்த ஓவிய மாளிகைக்கு வாங்கினர்கள்.

1939ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப் பெரும்போர் எழுந்தது. அப்போது லண்டன் மாநகரம் குண்டு வீச்சுக்கு, இடமாயிற்று. இந்த அற்புதமான கலைக்கருவூலம் கொடிய வர்களின் குண்டுவீச்சால் அழிந்துவிடுமே என்று அஞ்சி ஞர்கள், வீரர்கள் தம் மார்பில் குண்டுகளை ஏற்று உயிர் விட அஞ்சவில்லே. உயிரையும்விட உயர்ந்த கலப்பண்டங் அஆர அழியாமல் காக்கவேண்டும் என்று எண்ணி னர்கள். அவற்றை லண்டனிலிருந்து அகற்றி இங்கிலாந்தின் மேற் பகுதியிலும் வேல்ளி லும் கொண்டுபோய்ப் பாதுகாப்பாக வைத்தார்கள். போர்கின்று அமைதி நிலவியபிறகே அவற்றை ஒவ்வொன்ருக எடுத்து வந்து மீண்டும் இந்த ஒவியத் திருமாளிகையில் வைத்தார்கள் மாதத்துக்கு. ஒன்ருக அவற்றைக் கொண்டுவந்தார்களாம். ஒவியங்கள் வனவாசத்திலிருந்து மீண்டவை போலச் சில ஆண்டுகள் பாதுகாப்பான இடத்தில் இருந்து வந்து பழைய மாளிகை யில் இடங் கொண்டன. 1942ஆம் ஆண்டு முதல் 1945 வரை இந்த மீட்சிப்படலம் நடக் ததாம். - w.

போர் நடந்தபோது இந்த மாளிகையில் ஒன்பது. குண்டுகள் விழுந்தன. நல்ல வேளே! கட்டடத்துக்குத்தான் கிறிது சேதம் உண்டாயிற்றே ஒழிய, ஒவியங்கள் அவற்றின் தாக்குதலுக்கு அப்பாற்பட்ட இடத்தில் பாதுகாப்பாக இருந்தன. பிறகு சிதைந்த பகுதிகளைச் செப்பஞ் செய்து: விட்ட்ார்கள். இப்போது சில பகுதிகளைக் குளிர்பதன இட மாகச் செய்து மிகப் பழைய ஓவியங்களை அங்கே வைக்

திருக்கிருர்கள்.