பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் ஒவியங்கள் 201

மெழுகுக் காட்சிச்சாலையை அமைத்தார். புரட்சிக்குப் பின்னர் இங்கிலாந்துக்கு வந்தார்.தாம் வனைந்த உயிர்ோவி யங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வந்தார். 1802ஆம் ஆண்டு இங்கிலாந்து வந்தவர் அங்கேயே தங்கிவிட்டார். 1835இல் லண்டனில் காட்சிச்சாலையை நிறுவினர். அவருடைய கைவண்ணத்தைக் கண்டு யாவரும் வியர் தார்கள்; பாராட்டினர்கள்; வாழ்த்தினர்கள். 1761 முதல் 1850 வரையில் வாழ்ந்தவர் அவர். அவர் காலத்துக்குப் பின்னும் இந்தச் சிற்பக்கலையில் வல்லவர்கள் அவ்வப்போது பல வடிவங்களே அமைத்து இந்த உயிரோவியச் சாலையை வளப்படுத்தியிருக்கிருர்கள்; ஆகையால் இந்த ஓவியச்சாலை வளர்ந்துகொண்டே வருகிறது.

இந்த மெழுகுச் சித்திராலயத்தை அமைத்த பெரு மாட்டியே இங்கே காட்சி தருகிரு.ர். 1842ஆம் ஆண்டு 81 ஆண்டுகள் கிறைந்த முதிய பருவத்தில் அந்தக் கலேயரசியார் தாமே தம் வடிவத்தை மெழுகுப் பொம்மை யாக்கித் தந்திருக்கிரு.ர்.

பார்க்கப் பார்க்க வியப்பும் மதிப்பும் நம் உள்ளத்தில் ஊறுகின்றன. இந்தச் சாலையை நிறுவிய கலையரசியைப் பாராட்டுவதா? அவருடைய படைப்புகளோடு பின்னும் சிறிதும் தரம் குறையாமல் பல மெழுகு வடிவங்களே வனேந்து இந்தச் சிற்பக் களஞ்சியத்தில் சேர்த்து வரும் கலைஞர்களைப் பாராட்டுவதா? எல்லாரினும். மேலாக இந்த வடிவங்களே வைத்து நல்ல முறையில் பாதுகாத்து வரு கிருர்களே, அவர்களேயே அதிகமாகப் பாராட்டவேண்டும்.

அப்போதிருந்த பிரிட்டிஷ் மந்திரி சபையையே ஓரிடத்தில் பார்த்தேன். அந்தப் பகுதியை அடுத்து அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நிற்கிருர்கள். இரண்டாம் எலிசபெத் அரசியார் புதுப் பொலிவோடு விளங்குகிருர். 1966ஆம் ஆண்டில் இந்த வடிவம் இங்கே வந்ததாம். மெழுகுச் சிற்பி இந்த வடிவத்தை அமைப்ப